திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இளையராஜா மீது தெளிக்கப்படும் கருப்பு சாயங்கள்.. பாட்டுக்கு சொந்தம் கொண்டாட இதுதான் காரணம்

Ilayaraja: நல்லதுக்கே காலம் இல்லைன்னு பெரியவங்க சும்மாவா சொல்லிட்டு போனாங்க. நிஜமாகவே இந்த நவீன உலகத்தில் நல்லது செய்பவர்களுக்கு காலம் இல்லை தான். ஒரு காலத்தில் இசை அரசனாக தமிழ் சினிமா ரசிகர்களால் தலையை தூக்கி கொண்டாடப்பட்டார் இளையராஜா.

தன்னுடைய ஓய்வு காலத்தில் பாராட்டுகளை மட்டுமே கேட்டிருக்க வேண்டிய அவருடைய காதுகள், வசை பாடுதலை கேட்டுக்கொண்டு இருக்கின்றன. இது எதற்குமே அசராமல் இளையராஜா அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நான் போட்ட பாட்டுக்கள் எனக்குத்தான் சொந்தம் என மாசத்திற்கு ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருடைய வழக்குகள் நடந்து கொண்டிருக்கிறது. எஸ் பி பாலசுப்பிரமணியத்தை பாட விடல, ரஜினி படத்து மேல கேஸ் போட்டுட்டாரு, மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பிட்டார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது.

எவ்வளவோ சம்பாதித்து விட்டார், இப்போ இந்த ராயல்டி பிரச்சனையை கொண்டு வந்தும் சம்பாதிக்கணுமா. இப்படி என்ன இந்த மனுஷனுக்கு காசு மேல இவ்வளவு ஆசை பொதுமக்களே பேசும் அளவுக்கு ஆகிவிட்டது. அவருடைய இசையை ரசித்த நாம், அவர் பக்கம் என்ன நியாயம் இருக்கப் போகிறது என யோசிக்காமல் விட்டு விட்டோம்.

பாட்டுக்கு சொந்தம் கொண்டாட இதுதான் காரணம்

உண்மையிலேயே இளையராஜா போராடுவது அவருக்காக இல்லை. டெக்னாலஜிகள் வளர்ந்து விட்டதால் பல இசைக் கலைஞர்கள் வாய்ப்புகள் கிடைக்காமல் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்வதற்கு முன்னாடி எல்லாம் ஒரு பாட்டுக்கு 50 பேர் வயலின் வாசிக்க வேண்டும் என்றால், அந்த 50 பேருக்கு அன்று வேலை கிடைக்கும்.

ஆனால் இப்போது ஒரு வயலினை வாசித்து விட்டு கம்ப்யூட்டரில் போய் அம்பது என டைப் செய்து விட்டாள், 50 வயலின் சத்தம் கேட்கும். இளையராஜாவை நம்பி இருந்த நிறைய இசை கலைஞர்கள் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் முடங்கிப் போய்விட்டார்கள்.

ஒவ்வொரு ஸ்டுடியோவும் இசையமைப்பாளர், பின்னணி பாடகர்கள் என குருகிப் போய்விட்டது. பக்கவாத்தியங்கள் என்ற ஒன்று இப்போது இல்லை. இந்த நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவுவதற்காகத்தான் இளையராஜா தன் பாட்டுக்கு சொந்தம் கொண்டாடி காசு கேட்கிறார்.

இப்போது என்று இல்லை இளையராஜா உயிரோடு இருக்கும் வரைக்கும் அவருடைய பாடல்கள் உபயோகப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கு அவருக்கு காசு கொடுத்தாக வேண்டும் என்று போராடுகிறார். ஒருவரை நான் தப்பான கண்ணோட்டத்திலேயே பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் செய்யும் நல்லதும் கண்ணுக்கு தெரியாமல் போகும் என்பது உண்மைதான் போல.

இளையராஜா பற்றி மேலும் சில செய்திகள்

Trending News