Kamal Haasan: நடிகர் கமலஹாசனின் அக்மார்க் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று அபூர்வ சகோதரர்கள். இந்த படம் நடிகர் கமலால் பெரிய தோல்வி அடைய இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
இப்படி ஒரு விஷயத்தை தான் பகிர்ந்து இருக்கிறார் இயக்குனர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன். சமீப காலமாக பல youtube சேனல்களில் சினிமா பற்றிய செய்திகளை பகிர்ந்து வருகிறார் சித்ரா லட்சுமணன்.
அவரிடம் நேயர் ஒருவர் அபூர்வ சகோதரர்கள் படம் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் சொன்ன சித்ரா லட்சுமணன் கமலஹாசன் முதல் பத்து நாட்களில் எடுத்த அபூர்வ சகோதரர்கள் படம் இப்போ நாம் பார்க்கும் படமே கிடையாது.
கடவுள் போல் காப்பாற்றிய பஞ்சு அருணாச்சலம்!
உண்மையை சொல்ல போனால் பஞ்சு அருணாச்சலம் ஒருவரால் தான் அபூர்வ சகோதரர்கள் படம் இப்போது நாம் பார்க்கும் கதையாக அமைந்திருக்கிறது.
முதல் பத்து நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு கமல் அந்த படத்தை பஞ்சு அருணாச்சலத்திடம் போட்டுக் காட்டி இருக்கிறார்.
அதன் பிறகு அவர் மொத்த கதையையும் மாற்றி எடுத்த படம் தான் இப்போது நாம் பார்ப்போம் அபூர்வ சகோதரர்கள்.
அது மட்டும் இல்லாமல் கமலின் சூப்பர் ஹிட் படமான நாயகன் மொத்தம் எட்டு இயக்குனர்களால் திருத்தப்பட்டது என சொல்லப்படுகிறது.