புதன்கிழமை, ஜனவரி 22, 2025

திடீரென வெளியான கங்குவா ட்ரெய்லர்.. விஜய்யை குறிவைத்து கலெக்ஷனை அள்ள போட்ட திட்டம்

Suriya : சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகி இருந்தது. இந்தப் படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் அவசர அவசரமாக நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இதற்கான காரணம் இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதற்குப் பின்னால் வேறு முக்கிய காரணம் உள்ளது. அதாவது கங்குவா படம் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

இந்த படத்தை கண்டிப்பாக பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்ய காத்திருக்கின்றனர். அதோடு வருகின்ற ஆகஸ்ட் 15 விக்ரமின் தங்கலான் மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதி விஜய்யின் கோட் படங்கள் வெளியாகிறது. இந்த படங்களுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அவசரமாக கங்குவா ட்ரெய்லர் வெளியிட காரணம்

குறிப்பாக கோட் படம் கிட்டதட்ட 1500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த சூழலில் கங்குவா படத்தின் டிரைலரை தங்கலான் மற்றும் கோட் படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது படத்தின் ஆரம்பம் அல்லது இடைவெளியில் திரையிட இருக்கின்றனர்.

இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைய உள்ளது. அதுவும் ஒவ்வொரு தியேட்டரிலும் கங்குவா ட்ரெய்லர் வெளியிட ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். அதற்கெல்லாம் இப்போது படக்குழு தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்போது ட்ரெய்லர் வெளியிட்டால் தான் அடுத்ததாக தியேட்டரிலும் கோட் படத்தின் ரிலீஸ் போது ட்ரெய்லர் திரையிடப்படும். ஆகையால் தான் திடீரென படக்குழு இந்த முடிவை எடுத்து கங்குவா ட்ரெய்லரை வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கங்குவா ட்ரைலர்

Trending News