வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

லாபத்துல உங்களுக்கு மட்டும் பங்குன்னா எப்படி விக்கி-நயன்.. தனுஷ் கோபத்துக்கு இதுதான் காரணமாம் பாஸ்!

Nayanthara: ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. இப்போ கூத்தாடிகள் ரெண்டு பட்டிருப்பது யாருக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. தனுஷும் நயன்தாராவும் நல்ல நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அது மட்டும் இல்லாமல் போடா போடிக்கு பிறகு சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் தன்னுடைய வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சின்ன கேரக்டர் கொடுத்து இருப்பார். அது மட்டும் இல்லாமல் நானும் ரவுடிதான் கதையை தயாரித்து அந்த கதைக்குள் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா என்ற பெரிய பட்டாளங்களை உள்ளே கொண்டு வந்தார்.

தனுஷ் கோபத்துக்கு இதுதான் காரணமாம் பாஸ்!

ஆனால் தற்போது ஒரு சின்ன டாக்குமெண்டரி வீடியோவால் இவர்களுடைய நட்பு உடைந்து இருக்கிறது. அதிலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இதில் தனுஷ் மீது ரொம்பவும் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருப்பது நன்றாகவே தெரிகிறது.

உயிரைக் கொடுத்து அந்த படத்தை இயக்கி நல்ல பாடல்களை கொடுத்த தனக்கே அந்த படத்தின் மீது உரிமை இல்லை என்பதுதான் விக்னேஷ் சிவனின் கோபமாக இருக்கக்கூடும். அப்படி என்னதான் இவங்களுக்குள்ள பிரச்சனைன்னு எல்லோருக்குமே ஒரு குழப்பம் இருக்கிறது.

இதற்கு ஒரு சிலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த கருத்துக்களை பார்க்கும்போது ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று தோன்றுகிறது. அதாவது netflix ஓடிடி தளத்திற்கு தங்களுடைய கல்யாண வீடியோவை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பல கோடிகளுக்கு விற்று இருக்கிறார்கள்.

Nayan Dhanush
Nayan Dhanush

நானும் ரவுடிதான் படம் சம்பந்தப்பட்ட விஷயத்தை உபயோகப்படுத்தும் போது அதில் ஒரு பங்கை தனுஷ் தரப்புக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கலாம். இதில் இருந்து பிரச்சனை தொடங்கி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தனுஷ் தரப்பு வழக்கறிஞர் விரைவில் தனுஷ் இதற்கு பதில் அளிப்பார் என்று சொல்லி இருக்கிறார். தனுஷின் பதிலில் தான் பிரச்சனை என்ன என்பது முழுமையாக தெரியும்.

Trending News