திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பிரபுதேவாவிடம் கெஞ்சிய நயன்தாரா.. 12 வருடத்திற்கு பிறகு வெளிவந்த உண்மை

Nayanthara – Prabhudeva: நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக முன்னணி ஹீரோயின் ஆக இருக்கிறது. வெற்றி கதாநாயகி என்றாலும் சர்ச்சைகள் சூழ்ந்தது தான் இவருடைய வாழ்க்கை. நயன்தாராவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு, அவருக்கு எதிராக எழுந்த கோஷங்களும் ஒரு காலத்தில் உண்மையாக நடந்த ஒன்று தான். அதற்கு காரணம் அவருடைய காதல் வாழ்க்கை தான்.

2009 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் பிரபுதேவா இருவரும் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியானது. முதலில் வில்லு படத்தின் ப்ரோமோஷன்காக தான் இப்படி சொல்லப்படுகிறது என மக்கள் நினைத்திருந்தாலும் 2010 ஆம் ஆண்டு பிரபு தேவா அவர் நயன்தாராவுடன் உறவில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருந்த நிலையில் தான் நயன்தாராவை திருமணம் செய்ய துணிந்தார். நயன்தாராவும் தன்னுடைய காதலுக்காக சினிமாவை விட்டு ஒதுங்க போவதாக அறிவித்திருந்தார். நயன்தாராவுக்கு முழுக்க முழுக்க பிரபுதேவாவை திருமணம் செய்து அவருடன் வாழ வேண்டும் என்பது தான் கனவு.

Also Read:நயன்தாரா சம்பாதிக்க ஆசைப்பட்டு தோல்வியை சந்தித்த 5படங்கள்.. பெரிய நாமத்தை போட்ட கனெக்ட்

ஆனால் பிரபுதேவா அவருடைய மனைவியுடன் ஆன விவாகரத்திற்கு பிறகும் லிவிங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கையை தான் தொடர்ந்திருக்கிறார். ஏற்கனவே நயன்தாராவுடன் ஆன காதலால் சினிமாவில்,பெயர் டேமேஜ் ஆனதால் திருமணம் வரை போனால், பெயர் ரொம்ப கெட்டு போய்விடும் என்றுதான் கல்யாணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்து இருக்கிறார்.

போதாத குறைக்கு நயன்தாராவின் பணத்தில் ராஜபோக வாழ்க்கையும் வாழ்ந்து இருக்கிறார். அவருடைய பணத்தில் தான் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்திருக்கிறார். ஆனால் நயன்தாரா, பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று சொல்லி கொண்டே இருந்திருக்கிறார். காதலை இழக்க மனம் இல்லாமல் பிரபுதேவாவிடம் கெஞ்சி இருக்கிறார்.

பிரபுதேவா இது எதற்குமே சரிப்பட்டு வராமல் டிமிக்கி கொடுத்து கொண்டே இருந்து இருக்கிறார். இதனால் தான் நயன்தாரா பிரபுதேவாவுடன் இருந்த உறவை முறித்து கொண்டார். பிரபுதேவா அதன்பின்னர் நிறைய நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

Also Read:உயிர், உலகத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

 

 

 

- Advertisement -

Trending News