ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

GOAT படத்தில் விஜயகாந்த் வருவாரா இல்லையா.? பிரேமலதா வார்னிங் கொடுத்தது யாருக்கு ,ரகசியத்தை உடைத்த பிரபலம்

GOAT: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது எப்போதுமே அதிகமாக இருக்கிறது. அவர் எப்போ, எதில் சிக்குவார் போட்டுத் தாக்கலாம் என பெரிய தலைவர்கள் முதற்கொண்டு காத்து கிடக்கிறார்கள்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதோடு, அந்த மேடையில் நீட் தேர்வு பற்றி விஜய் பேசியிருந்தால். இதனால் அவர் மீது அதிக வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய அனுமதி இல்லாமல் விஜயகாந்தை தன்னுடைய படங்களில் யாரும் தொழில்நுட்ப முறையில் உபயோகப்படுத்த கூடாது என அறிக்கை விட்டிருந்தார். உடனே ஒட்டுமொத்தமாக GOAT படத்தில் விஜயகாந்த் வரும் தொழில்நுட்ப காட்சிகளைத் தான் பிரேமலதா சொல்லுகிறார்.

பிரேமலதா வார்னிங் கொடுத்தது யாருக்கு

அந்த படத்தில் விஜயகாந்த் காட்சி வர வாய்ப்பே இல்லை என விமர்சனங்களை எழுப்பினார்கள். ஆனால் தற்போது இந்த சந்தேகத்திற்கு சரியான விளக்கம் கிடைத்திருக்கிறது. விஜயகாந்த் இறந்து ஒரு சில நாட்களிலேயே தொழில்நுட்பம் மூலம் அவரை படத்தில் கொண்டு வர வேண்டும் என நினைத்தது வெங்கட் பிரபு தான்.

மேலும் இந்த பட குழு பிரேமலதாவிடம் முறையாக அனுமதி கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. GOAT படத்தில் இப்படி ஒரு தொழில்நுட்ப முறையை பயன்படுத்துகிறார்கள் என தெரிந்ததும் ஆளாளுக்கு தங்களுடைய படங்களில் இதை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஆடியோ வெளியீட்டு விழா, நாளிதழ் செய்திகளில் இதை அறிவிக்கிறார்கள். எந்த மாதிரியான படம், எந்த மாதிரியான காட்சிக்கு விஜயகாந்த் உபயோகப்படுத்துகிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டியது அவருடைய குடும்பத்தாரின் கடமை.

அதைத்தான் தற்போது பிரேமலதா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். விஜய் தன்னுடைய படத்தில் விஜயகாந்தை தவறாக உபயோகப்படுத்துவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. கண்டிப்பாக இந்த காட்சி விஜயகாந்த்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகத்தான் இருக்கும். மேலும் முன்னே அனுமதியும் வாங்கி இருப்பதால் GOAT விஜயகாந்தின் தொழில்நுட்பக் காட்சிகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

Trending News