திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உயிர் நண்பன் ரகுவரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத ரஜினி.. கண்ணீருடன் அவர் அம்மா சொன்ன காரணம்

Raghuvaran – Rajinikanth: நடிகர் ரகுவரனை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் என்று கூட சொல்லலாம். இவருடைய பல படங்களை இப்போது பார்க்கும்போது கூட, இவரால் எப்படி இப்படி நடிக்க முடிந்தது என வியந்து பார்க்கத் தோணும். பாட்ஷா படத்தில் இல்லத்தனத்தால் மிரட்டிய மார்க் ஆண்டனியா, லவ் டுடே படத்தில் அப்பா என மிரள வைத்திருப்பார்.

இப்படி ஒரு அற்புத கலைஞன் ரொம்பவும் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் போனது சினிமாவிற்கு நேர்ந்த ஒரு மிகப்பெரிய இழப்பு. நடிகர் ரகுவரனின் இறப்பிற்குப் பிறகு அவருடைய முன்னாள் மனைவி ரோகினி அவரைப் பற்றி நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அதேபோன்று அவ்வப்போது அவருடைய மகனும் மீடியாவில் வந்திருக்கிறார். மற்றபடி அவருடைய குடும்பத்தை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது.

Also Read:ரஜினிக்கு பிடித்த சரக்கு மற்றும் சிகரெட் பிராண்ட் இதுதான்.. ஒரு நாளைக்கு இத்தனை பாக்கெட் குடிப்பாரா.?

அப்படி இருக்கும் பொழுது ரகுவரனின் அம்மா மற்றும் தம்பி திடீரென மீடியாவில் பேட்டி கொடுத்தது எல்லோருக்கும் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அதிலும் ரகுவரனின் தம்பியை பார்க்கும் பொழுது அப்படியே அச்சு அசல் ரகுவரன் வந்து உட்கார்ந்து பேசுவது போலவே இருந்தது. அவருடைய அம்மா இன்னும் தன் மகனே எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை பார்த்து அனைவருக்கும் கண் கலங்கியது.

ரகுவரனின் சினிமா வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்த அவருடைய அம்மாவும், தம்பியும் ரகுவரன் மற்றும் ரஜினிகாந்த் இடையே உள்ள நல்ல நட்பை பற்றியும் பேசி இருந்தார்கள். இதில் நடிகர் ரஜினிகாந்த், ரகுவரனின் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று சொன்ன விஷயம் தற்போது மீடியாக்களில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.

Also Read:31 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைய இருந்த உயிர் நண்பன்.. கடைசி நேரத்தில் ஜெயிலரில் வில்லனான விநாயகன்

உயிர் நண்பனின் மறைவிற்கு ரஜினிகாந்த் செல்லவில்லை என்பது நெகட்டிவ்வாக பேசப்படுகிறது. ஆனால் உண்மையில் ரகுவரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சூப்பர் ஸ்டார் அவர்கள் நேரிடையாக அந்த மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். ரகுவரனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நேரத்தில் அந்த மருத்துவமனையிலேயே ரஜினி ரொம்ப நேரம் இருந்ததாக அவருடைய தம்பி சொல்லி இருக்கிறார்.

ரஜினி, ரகுவரனின் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு காரணம், இப்படி ஒரு நண்பனை, மகா கலைஞனை அந்த நிலையில் தன்னால் பார்க்க முடியாது என்ற காரணத்தினால் தான் போகவில்லை. மேலும் ரகுவரன் இறப்பதற்கு முன்பு கடந்த 2007 இல் ரஜினியுடன் இணைந்து சிவாஜி படத்தில் நடித்திருந்தார். இந்த பேட்டிக்கு பிறகு சூப்பர் ஸ்டார், ரகுவரனின் குடும்பத்திற்கு பண உதவிகள் செய்ய கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது.

Also Read:முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி, கமல் படம்.. சூப்பர் ஸ்டாரை தூக்கி விட்டு, ஆண்டவரை காலை வாரியது

Trending News