வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

திட்டம் போட்டு திசை திருப்பிய சிவகார்த்திகேயன்.. அட, சூர்யா மேல அப்படி இவருக்கு என்ன தான் காண்டு?

Sivakarthikeyan: சூர்யாவுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் சில செய்திகளை பார்க்கும் பொழுது விஷயம் புரியாதவர்களுக்கு இப்படி ஒரு கேள்வி இருக்கத்தான் செய்யும்.

விஜய் மற்றும் அஜித் வளர்ந்து வரும் காலங்களில் அறிமுகமாகி டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இருப்பவர் சூர்யா. கிட்டதட்ட 14 வருடங்களுக்கு முன் மெரினா படத்தின் மூலம் ஹீரோவாகி அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுத்து ஒரு நிலையான இடத்திற்கு வந்து கொண்டிருக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.

சொல்லப்போனால் சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் தான் முதல் பிளாக் பஸ்டர் ஹிட். அப்படி இருக்கும்போது இவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை என்று தோணும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இருவரது படமும் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

திட்டம் போட்டு திசை திருப்பிய சிவகார்த்திகேயன்

அதில் சிவகார்த்திகேயன் படம் ஆஹா ஓஹோ என்று பாராட்டும் அளவுக்கு அமைந்து விட்டது. நடிகர் சூர்யா நடித்த 14ஆம் தேதி ரிலீசான கங்குவா படம் பெரிய அளவில் விமர்சனங்களை பெறவில்லை. ஒரு படம் வெற்றி பெறுவது மற்றும் தோல்வி அடைவது என்பது ரசிகர்களின் பார்வையில் தான் இருக்கிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த இரண்டு பேருக்கும் ஏதோ மோதல் போக்கு இருப்பது போல் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிவகார்த்திகேயனை உண்மையிலேயே நடிகை ஜோதிகா மனமார பாராட்டி இருந்தார்.

ஆனால் அதெல்லாம் இப்போ கணக்கு இல்ல. சிவகார்த்திகேயனுக்கும், சூர்யாவிற்கும் சண்டை தான் என ஒரு பெரிய கதை ஓடிக்கொண்டிருக்கிறது. டாப் லிஸ்டில் இருக்கும் ஹீரோவான சூர்யாவின் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் மற்ற பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

அப்போ எப்படி சூர்யாவை ட்ரோல் செய்வது என யோசித்து தான் சிவகார்த்திகேயனை இந்த கண்டன்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். நவம்பர் 14ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆக வேண்டிய சூழலில் நவம்பர் 13ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்திக்கு பிறந்தநாள்.

அதற்கு அமரன் கெட்டப்பில் திடீரென வீட்டிற்குள் சர்ப்ரைஸ் கொடுக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து ஹாப்பி பர்த்டே ஆர்த்தி என சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ நவம்பர் 14ஆம் தேதி பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டது.

இதைத்தான் இப்போது சிவகார்த்திகேயன் திட்டம் போட்டு செய்து விட்டதாக சிலர் சொல்லி வருகிறார்கள். அதுக்கு என்ன அவர் ஒரு பொண்டாட்டியோட பிறந்தநாள் தள்ளி வைக்க முடியும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் பாஸ் என சிலர் இதற்கு தங்களுடைய பதிலையும் தெரிவித்து வருகிறார்கள்.

Trending News