திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கலர் கலராக ரீல்விட்ட ஜோதிகா.. பாலிவுட்டில் சம்பாதிக்க திட்டம் போட்ட சிவகுமார் குடும்பம்

Actress Jyothika: கரகாட்டக்காரன் பட காமெடியில் கவுண்டமணி கோவை சரளாவிடம் என்ன கலர் கலரா ரீல் விடுறீங்க என கேட்டிருப்பார். இப்ப இந்த டயலாக் ஜோதிகாவுக்கு தான் சரியாக இருக்கும் போல. சமீபத்தில் ஒரு பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த ஜோதிகா, தன்னுடைய அப்பா அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்காகவே மும்பையில் குடித்தனம் போயிருப்பதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் அதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்பதற்கு தற்போது ஆதாரம் கிடைத்திருக்கிறது.

கோலிவுட்டில் சூர்யா மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் ஒரு நடிகர். சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் உலக அரங்கில் கவனிக்கப்பட்டு, அவருக்கு ஆஸ்கார் ஜூரி வரை அழைப்பு விடுக்கப்பட்டது. சூர்யா தயாரித்து நடித்த சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்ததும், அவருடைய காதல் மனைவி ஜோதிகாவுக்கு சட்டென பாலிவுட் ஆசையும் சேர்ந்து வந்து விட்டது.

சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்த காதல் தி கோர் படம் பெரிய வெற்றியும் அடைந்தது. அதைத்தொடர்ந்து ஜோதிகா உடல் எடையை குறைப்பது என ஜிம் பக்கம் சென்று விட்டார். அதோடு மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு மும்பை பக்கம் குடித்தனமும் போய்விட்டார். அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, பிள்ளைகளுக்கு படிப்பு அங்கு நன்றாக இருக்கிறது என சாக்கு போக்கு சொன்னாலும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே பாலிவுட்டில் களமிறங்க வேண்டும் என்பதுதான் உண்மையான ஐடியா.

Also Read: 24 வருஷத்துல இருபத்திநாலு படம், அஞ்சு படம் மட்டும் ஹிட்.. எல்லாம் நடிகையை மேரேஜ் பண்ணி வீணா போன டைரக்டர்

ஜோதிகா பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் உடன் இணைந்து சைத்தான் என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இதில் மாதவனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். அதே போன்று இன்னொரு ஹிந்தி படத்தில் சூர்யா கர்ணன் கேரக்டரில் நடிக்கிறார். சரி வருகிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள் இதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கலாம். சினிமாவுக்கு மொழி இல்லை, வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால் சூர்யா ஜோதிகா போனதற்கு பின்னாடியே ஞானவேல் ராஜா பெட்டியை கட்டிக்கொண்டு மும்பை சென்று இருப்பது தான் இப்போது பிரச்சனை.

சூர்யா ஜோதிகா போட்ட திட்டம்

சிவகுமார் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் ஆபீசை மும்பையில் திறந்திருக்கிறார். இதற்கு சிவகுமார் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இனி சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு பாலிவுட் சினிமாக்காரர்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இவர்களே தயாரித்து நடித்துக் கொள்வார்கள்.

சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு ஓரளவுக்கு பெயர் கிடைத்ததும் அவர்களை தொடர்ந்து கார்த்தியும் அங்கே போய் விடுவார். கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய தங்கை பிருந்தா ஹிந்தியில் பின்னணி பாடகி ஆகிவிடுவார். இனிஇவர்களிடம் அமீர் போல் எந்த இயக்குனர் சிக்கிக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை என சினிமா வட்டாரத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

Also Read: நாக சைதன்யாவை நான் பிரிந்த அந்த வருடம்.. கண்கலங்கிய சமந்தா

Trending News