Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் அமரன் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் ரிலீஸ் க்கு பிறகு சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக உருவாகிவிடுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அதிலும் மறைந்த ராணுவ அதிகாரி வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிப்பதால் இந்தப் படத்திற்கு பெரிய அளவில் ரிலீசுக்கு முன்னாடியே வரவேற்பு கிடைத்து விட்டது. மேலும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று அமரன் படம் ரிலீஸ் ஆகும் நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகளில் பட குழு பிஸியாக இருக்கிறது. நேற்று நடந்த விழா ஒன்றில் அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசிய வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
அமரன் என்று பெயர் வச்சதுக்கு இதுதான் காரணம்
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்துக் கொடுக்கும் சூழ்நிலையில் இருப்பதால் அவரால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார். மேலும் முகுந்த் வரதராஜன் இறந்த செய்தி கேட்டதும் நான் முதல் முதலில் பார்த்த வீடியோ அவர் அவருடைய மகளுடன் இருப்பதைத்தான்.
அதனால் தான் அந்த வீடியோவை டிரைலரின் முதலில் இணைத்திருக்கிறேன். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கும் போது அவருடைய கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்ற கேள்விக்கு எல்லோருடைய பதிலும் சிவகார்த்திகேயன் என்று தான் இருந்தது.
படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததும் அதை ராணுவ அதிகாரிகளுக்கு நாங்கள் அனுப்பினோம். மேலும் படம் எடுத்து முடித்ததும் அதையும் ராணுவ அதிகாரிகளுக்கு போட்டுக் காட்டினோம். இந்த படத்திற்கு அமரன் என்று பெயர் வைக்க முக்கிய காரணம் இருக்கிறது.
அமரன் என்றால் மரணம் இல்லாதவன் என அர்த்தம். டெல்லியில் அமர் ஜவான் ஜோதி என ஒரு இடம் இருக்கிறது. அங்கு இறந்த ராணுவ வீரர்களுக்கு தினமும் விளக்கு ஏற்றி வைக்கப்படும். அமர்ஜவான் என்றால் இறந்த ராணுவ வீரர்கள் என்று அர்த்தம். இந்த படத்திற்கும் அமரன் என்ற டைட்டில் தான் சரியாக இருக்கும் என்பதால் தான் இதை வைத்து இருக்கிறோம் என்றார்.