சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தளபதியின் தமிழக வெற்றி கழகம்.. கட்சி பெயருக்கு பின்னால் இருக்கும் அசர வைக்கும் காரணம்

Thalapathy Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வர போகிறார் என்ற செய்தி கடந்த ஒரு வருடமாகவே தமிழகத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. மற்ற ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்டப் போல தான் விஜய் அரசியலுக்கு வர போகிறார் என்ற செய்தியையும் நாம் கடந்து போகி இருப்போம். இன்றைய நாள் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக தொடங்கி இருக்கிறார். அவருடைய ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இந்த செய்தியை திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் ஆரம்பிக்க போகும் கட்சிக்கு தமிழக முன்னேற்ற கழகம் என பெயர் குறிக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தன. தளபதி விஜய் இன்று தன்னுடைய கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். தளபதியின் தலைமையின் கீழ் தமிழக வெற்றி கழகம் கட்சி நிறுவப்பட்டு இருக்கிறது.

தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியை அறிமுகப்படுத்தியதோடு அவர் அரசியலுக்கு வருவதற்கான நோக்கத்தையும் தெளிவாக அறிக்கையில் சொல்லியிருக்கிறார். கட்சியின் பெயரையும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாகிவிட்டது. இனி மக்கள் மனதை வென்று வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்த்லில் போட்டியிடுவது மட்டும் தான் அடுத்த கட்ட குறிக்கோளாக விஜய்க்கு இருக்க போகிறது.

Also Read:அரசியல் பொழுதுபோக்கு அல்ல, என் ஆழமான வேட்கை.. மக்கள் பணிக்காக நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய்

விஜய் தன்னுடைய கட்சிக்கு எதற்காக தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்து இருக்கிறார் என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருக்கிறது. தன்னுடைய கட்சி வெற்றியை நோக்கி பயணிப்பதற்காக அந்த பெயரை வைத்திருப்பதாக சொல்கிறார்கள். ஒரு சிலர் V எழுத்து தன்னுடைய கட்சி பெயரில் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி வைத்திருக்கிறார் என்று கூட சொல்கிறார்கள். தளபதி அந்த பெயரை வைப்பதற்கு உண்மையிலே வேறொரு சுவாரஸ்யமான செண்டிமெண்ட் காரணம் இருக்கிறது.

அரசியில் கட்சியின் பெயர் காரணம்

கடந்த 1984 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கதில் விஜயகாந்த் நடித்த வெற்றி படத்தில் தான் நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமானார். இப்போது வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் கலக்குகிறார். கிட்டத்தட்ட 39 வருடங்கள் கழித்து அரசியல் கட்சியின் தலைவர் ஆகி இருக்கும் போது தன்னுடைய முதல் படத்தின் பெயரை செண்டிமெண்ட் ஆக சேர்த்திருக்கிறார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு சந்தோசம் தான் என்றாலும் 1984வது படத்தை முடித்து கொடுத்து விட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். தமிழக வெற்றி கழகம் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என விஜய் அறிவித்து இருக்கிறார். மேலும் இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க போவதும் இல்லை. விஜய் மட்டும் அவருடைய கட்சி நிர்வாகிகள் நேரிடையாக ௨௦௨௬ ஆம் ஆண்டு நடக்ககியிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தங்களை தயார்படுத்தி கொள்ள இருக்கிறார்கள்.

Also Read:25 வருடம் மிளகாய் அரைத்த ரஜினி.. கமலின் பார்ட் டைம் அரசியல், தில்லாக இறங்கிய விஜய்யின் தலைமை எப்படி இருக்கும்.?

Trending News