வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜயகாந்த் நிலை குலைந்து போக இது எல்லாம் தான் காரணம்.. சிங்கம் போல் இருந்த மனுஷன், எவ்வளவுதான் தாங்குவார்

Captain Vijayakanth: நமக்கு பிடித்த நடிகர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் அப்டேட்டுகளை பார்ப்பதற்கு எப்போதுமே ஆர்வமாக இருக்கும். ஆனால் விஜயகாந்த்திற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தும், தயவு செய்து அவருடைய புகைப்படங்களை எங்களுக்கு காட்டாதீர்கள் என்று கதறும் அளவுக்கு அவருடைய நிலைமை ஆகிவிட்டது. கம்பீரமாக இருந்த ஒரு மனிதனை இப்படி பார்ப்பதற்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது.

சிங்கம் போல் கர்ஜிக்கும் அவருடைய குரலைக் கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. தட்டு தடுமாறி இன்னொருவரின் உதவியோடு தன் ரசிகர்களை பார்த்து கையசைக்கும் தலைவனை பார்க்கவே கண்கள் குளமாகி போவதாக அவருடைய தொண்டர்களும், ரசிகர்களும் கதறிக்கொண்டு இருக்கிறார்கள். விஜயகாந்திற்கு நோய் என்பதை தாண்டி, மன கஷ்டம் தான் ரொம்பவும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

Also Read:மருத்துவமனையில் இருந்து வெளியான ஷாக்கிங் புகைப்படம்.. அடையாளமே தெரியாமல் மாறிப்போன கேப்டன்

விஜயகாந்த் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பெரிய ஆசையோடு கட்சி தொடங்கினார். தன்னுடைய கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அளவு கடந்து நம்பினார். ஆனால் ஒரு கட்டத்தில் பணத்திற்காக ஆசைப்பட்டு அவர்கள் ஒவ்வொருவராக வேறொரு கட்சியில் சேர்ந்தது விஜயகாந்த் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஏமாற்றமாக ஆகிவிட்டது.

உயிர் நண்பனின் பிரிவு

விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் தான் ராவுத்தர் பாய். அவர் இல்லாமல் இன்று தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற ஒருவர் இல்லை. ஆனால் சூழ்ச்சிகளால் ஏற்பட்ட மனக்கசப்பால் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் மற்றும் அவருடைய உயிர் நண்பர் ராவுத்தர் பேசாமலேயே இருந்து விட்டார்கள். அதன் பின்னர் ராவுத்தர் பாய் இறந்தும் விட்டார். அவருடைய இழப்பு விஜயகாந்தை பெரிதாக பாதித்துவிட்டது.

அதேபோல் கட்சி பெயரை வைத்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் தம்பி நன்றாக காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார். இதை பிரேமலதா அவரிடம் இருந்து மறைத்து விட்டார். ஒரு கட்டத்தில் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வரும் பொழுது உறவுகளாலேயே ஏமாற்றப்பட்டது விஜயகாந்திற்கு அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. நல்ல நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்து, இப்படி நாசமாகி விட்டதே என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

விஜயகாந்தின் விருப்பம் இல்லாமல் அவருடைய கட்சி கூட்டணியில் சேர்க்கப்பட்டது. கட்சி பணத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நம்பு இருந்த உறவுகளே நம் பெயரை மொத்தமாக கெடுத்து விட்டதே என்ற மன கஷ்டத்தில் தான் கேப்டன் நிலைகுலைந்து போய் உட்கார்ந்து விட்டார். அவர் அரசியல் தலைவனாக ஆளாமல் போனாலும், செய்த தர்மத்திற்காக நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதுதான் எல்லோருடைய பிரார்த்தனையாகவும் இருக்கிறது.

Also Read:80, 90களில் கமலுக்கு டஃப் கொடுத்த விஜயகாந்த்.. ஒரே நாளில் விடாமல் 22 தடவை மோதிய கேப்டன்

Trending News