ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஷ்ணு விஷால் விவாகரத்திற்கு காரணம் இவர்தானாம்.. முதல் முறையாக வெளியான ரகசியம்

Vishnu Vishal : விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் லால் சலாம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த விஷ்ணு விஷால் ஒரு கட்டத்தில் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். ஆனாலும் தொடர்ந்து கிரிக்கெட் கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு விஷ்ணு விஷால் பேட்டி கொடுத்து வருகிறார். தற்போது வரை தனது முன்னாள் மனைவி பற்றி பேசாத விஷ்ணு விஷால் முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

அதாவது நீர்பறவை படத்தில் நடித்த போது அந்த படத்தின் துணை இயக்குனர் நடராஜன் என்பவரின் மகள் ரஜினியை காதலித்து விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஆரியன் என்ற ஒரு மகன் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

Also Read : விஜய் தம்பி வளர கூடாது என திட்டம் தீட்டும் விஷ்ணு விஷால்.. வாரிசு நடிகருக்கே இந்த நிலைமையா!

தனது முன்னாள் மனைவி பற்றி பேசாத விஷ்ணு விஷால் லால் சலாம் மேடையில் கூட மனைவியின் பெயரை சொல்லாமல் எனது மகனின் அம்மா என்று கூறிப்பிட்டு இருந்தார். இப்போது ஒரு ஊடகத்தில் பேசும்போது ரஜினியிடம் தான் விவாகரத்து கேட்கவில்லை என்பதை கூறியிருக்கிறார்.

அதாவது தன்னிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்ற முடிவை ரஜினி தான் எடுத்தார். மேலும் கோட்டில் கூட ரஜினி தான் என்னை பிரிய வேண்டும் என்று சொன்னார், அப்போது நான் மௌனமாக தான் இருந்தேன். அதன் பிறகு இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்த நிலையில் ஜுவாலா காட்டாவின் நட்பு கிடைத்தது. அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.

Also Read : முதலுக்கே மோசமான லால் சலாம், டஃப் கொடுக்கும் லவ்வர்.. 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Trending News