வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

எங்க அண்ணன ஏன் ஜவான்ல யூஸ் பண்ணல தெரியுமா.? பெரிய பிளானை தீட்டி வைத்திருக்கும் அட்லி

Atlee – Vijay: தளபதி விஜய்யின் பாசமான தம்பி அட்லி பாலிவுட்டிற்கு சென்று ஷாருக்கானை இயக்கப் போகிறார் என்று தெரிந்ததிலிருந்து விஜய் கண்டிப்பாக அதில் முக்கியமான ஏதாவது ஒரு கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கூட விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் என வதந்திகளும் வந்தது. பட ரிலீசுக்கு பிறகு தான் ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை என்பது தெரிந்தது.

ஜவான் பட இசை வெளியீட்டு விழாவில் இருந்தே அட்லி ஏகத்துக்கும் பேச்சில் புளிப்பு காட்ட ஆரம்பித்து விட்டார். மேடை ஏறி அவர் பேசிய நிறைய விஷயங்கள் எதுக்கு இதெல்லாம் என்பது போல் இருந்தது. ரிலீசுக்கு முன்பே அலப்பறை கூட்டிய இவர், இப்போது படம் ஓரளவுக்கு தேறி விட்டது என்றதும் எப்பா போதுண்டா சாமி என்பது போல் பேசி வருகிறார்.

Also Read:மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்.. அட இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜவான் படத்தில் அவருடைய அன்பான அண்ணனுக்கு ஏன் கேமியோ ரோல் கொடுக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதாவது விஜய்க்கு இப்படி சின்ன ரோல் கொடுப்பது எல்லாம் அட்லியின் திட்டம் இல்லை, அவர் அடுத்து தளபதியை வைத்து மிகப்பெரிய திட்டம் ஒன்றை போட்டு இருக்கிறார். அதனால் தான் ஜவானில் நடிக்க விஜய்யை கூப்பிடவில்லை.

இயக்குனர் அட்லியின் அடுத்த திட்டத்தின் படி அவருடைய பெரிய அண்ணன் ஷாருக்கானையும், சின்ன அண்ணன் விஜய்யையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க இருக்கிறார். அதற்கான கதையையும் யோசித்து வருவதாக சொல்லி இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் கண்டிப்பாக 1500 கோடி வசூல் செய்யும் என்றும் தன்னம்பிக்கையுடன் சொல்லி இருக்கிறார்.

Also Read:விஜய்யை ஓவராக டார்ச்சர் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்.. அப்பாவை வெறுத்ததற்கு இதுதான் காரணம்

அட்லிக்கு கதைக்கு பஞ்சம் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அதேபோன்று அவருடைய இரண்டு அண்ணன்களும் கால்ஷீட் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். இந்த நம்பிக்கையில் தான் அட்லி தன்னுடைய திட்டத்தைப் பற்றி மீடியா முன்பு ரொம்பவும் தைரியமாக சொல்லி இருக்கிறார்.

ஷாருக்கான் மற்றும் விஜய் இணைந்து நடித்தால் கண்டிப்பாக அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். கோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்களும் அட்லியின் பேட்டிக்கு பிறகு இந்த படம் உருவாக வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களுடைய அடுத்த படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால், இப்போதைக்கு இது சாத்தியம் இல்லை என்று தான் தெரிகிறது.

Also Read:சர்ச்சைகளால் கழட்டி விட்ட விஜய்.. ஹிட் பட இயக்குனர், இப்போ டம்மியாய் சுற்றும் பரிதாபம்

Trending News