வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நானும் பிழைக்கனும்ல.. எல்லாத்துக்கும் முட்டுக்கட்டை போடும் அருண் விஜய்!

அருண் விஜய் வரிசையாக நான்கைந்து படங்களில் நடித்து முடித்து வைத்திருக்கிறார். அதன் ரிலீசை பற்றி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கேட்டால் கொஞ்சம் பொருங்கள் அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்று முடித்து வைத்திருக்கும் படங்களின் ரிலீசை தள்ளிப் போடுகிறார். இதற்கு காரணம் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் 33-வது படமாக நடித்திருக்கும் யானை படத்தை அவர் பெரிதும் நம்பி கொண்டே இருக்கிறார்.

இந்த படம் வந்தால் எனக்கு மார்க்கெட் வேற லெவல் இருக்கும். அதனால் கொஞ்சம் பொறுங்கள். எல்லா படத்துக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். இதனால் யானை படத்தை வைத்தே மற்ற படங்களை வியாபாரம் செய்து விடலாம் என்று ஒரு பெரிய திட்டம் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். ஹரி இயக்கி இவர் நடித்து வெளிவர இருக்கிறது யானை படம்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதனால் அருண் விஜய் இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் டிரெய்லரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ட்ரெண்டாக்கினார்.

அதன் பிறகு இந்தப் படம் வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் இசையமைத்த இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, இவர்களுடன் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா, சரத்குமார், அம்மு அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஹரி கடைசியாக சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி சூப்பர் ஹிட் அடித்த பிறகு, நான்கு வருடங்கள் எந்தப் படமும் இயக்காமல் தற்போது அருண் விஜய்யும் யானை படத்தை பார்த்து பார்த்து இயக்கியுள்ளார். இந்தப் படம் ஹரியின் மற்ற படங்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகவே எடுத்திருப்பதாக சமீபத்தில் ஹரி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் .

ஆகையால்  இப்படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் அடுத்தடுத்த அருண்விஜயின் படங்களின் வெற்றி அமைந்திருப்பதால் இந்தப் படத்தை குறித்து பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். யானை படத்தை தொடர்ந்து அருண் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகப்போகிறது.

Trending News