திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பேராசையில் தளபதி 68 சம்பளத்தில் செக் வைத்த விஜய்.. தலவிதின்னு ஏஜிஎஸ் 200 கோடி கொடுப்பதன் சூழ்ச்சி

Thalapathy 68: விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி 68 படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஜோதிகா, பிரியங்கா அருள் மோகன் போன்ற நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இப்போது இந்த படத்தைப் பற்றிய அப்டேட் வெளியானால் லியோ படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தளபதி 68 படக்குழு மௌனமாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் 125 கோடி சம்பளம் பெற்று வந்த விஜய் திடீரென 200 கோடி சம்பளம் பெறுவதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

Also Read : எட்ட முடியாத உயரத்தில் ரஜினி, விஜய்க்கு போட்டி அந்த நடிகர் தான்.. வெளிப்படையாக பேசிய பிரபலம்

ஒரே படத்தில் அதிரடியாக 75 கோடி கூடுதலாக கொடுப்பதற்கு காரணம் விஜய் வைத்த செக் தான். அதாவது தளபதி 68 படத்திற்கு சம்பளமாக 100 கோடி கேட்ட விஜய், மேலும் படத்தில் வரும் லாபத்தில் ஷேர் கேட்டிருந்தாராம். இப்போது லியோ படத்தின் பிரீ பிசினஸ் படு பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் லாபம் பல மடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதுவரை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருக்கும் விஜய்யின் படம் எப்போதுமே மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும். அந்த வகையில் தளபதி 68 படத்தின் பட்ஜெட் போக லாபம் மட்டும் தோராயமாக கிட்டத்தட்ட 300 கோடி வருவதாக வைத்துக் கொள்ளலாம்.

Also Read : தெரியாத்தனமாக சூழ்ச்சி வலையில் மாட்டிய லியோ படம்.. வசூலில் பின்தங்கி போகும் விஜய்

இந்த 300 கோடியில் பாதி தொகை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு போக மீதம் உள்ள 150 கோடி மட்டுமின்றி சம்பளம் 100 கோடியும் சேர்த்து விஜய்க்கு 250 கோடி ஷேர் சேரும். ஆனால் விஜய் தனது நிறுவனத்தில் நடிக்க சம்மதித்ததை தவறவிட்டு விட கூடாது என்பதற்காக ஏஜிஎஸ் தலைவிதி என விஜய்க்கு 200 கோடி சம்பளத்தை நிர்ணயித்தது.

கடைசியாக பேச்சுவார்த்தைக்கு பின் விஜய்யும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்துடன் தான் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஆனாலும் என்னதான் தளபதி படம் வசூலில் பட்டையை கிளப்பினாலும் லாபத்தில் பங்கு கேட்டது கொஞ்சம் ஓவர் தான் என சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : ரஜினி, விஜய்யை விட மிக மிக சொற்ப சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டார்ஸ்.. மம்மூட்டிக்கு கூட இவ்வளவுதானா?

Trending News