சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அனிருத்தை ரிஜெக்ட் செய்த ஏஜிஎஸ்.. தளபதி 68இல் யுவன் வர காரணம்

தளபதி 68 படத்தின் அப்டேட் வந்ததிலிருந்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறார்கள். முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற மிகப்பெரிய சர்ச்சை நிலவி வந்தது.

கடைசியாக யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்தின் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் விஜய்க்கு எப்போதுமே அனிருத் தான் இசையமைப்பார். மேலும் வாரிசு படம் தெலுங்கு பக்கம் சென்றதால் தமன் இசை அமைத்திருந்தார்.

Also Read : தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த விஜய்.. 4 வருடத்திற்கு பின் இணையும் எவர்கிரீன் கதாநாயகி

இந்நிலையில் தளபதி 68 படத்தில் அனிருத் இசை அமைக்காததன் காரணம் வெளியாகி இருக்கிறது. அதாவது தளபதி 68 இன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.

அப்போது தயாரிப்பு நிறுவனம் லவ் டுடே படத்திற்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டபோது உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டாராம். மேலும் லவ் டுடே படம் வெளியாகி பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருந்தும் யுவன் இவ்வளவு பணிவுடன் நடந்து கொண்டது ஏஜிஎஸ்-க்கு பிடித்திருந்தது.

Also Read : படத்தின் பட்ஜெட்டை சம்பளமாக கேட்டா நியாயமா.? கும்பிடு போட்டு தளபதி 68க்கு ஏஜிஎஸ் போட்ட கணக்கு

தளபதி 68 படத்தில் யுவனிடம் இசையமைக்க கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு படம் என்றாலே யுவன் இசை தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்தப் படத்திற்கும் உங்கள் விருப்பம் என்று யுவன் சொல்லியதால் குறைந்த சம்பளத்தில் பேசி முடித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

அதுமட்டுமின்றி அனிருத்தும் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளதால் தளபதி 68 படத்தில் அவரால் இசையமைக்க முடியாது. இதை விஜய் இடம் சொல்லி தயாரிப்பு நிறுவனம் யுவனை படத்தில் ஒப்பந்தம் செய்து முடித்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் யுவனின் பணிவு தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : தளபதி 68 விஜய்யுடன் மோத உள்ள சைக்கோ வில்லன்.. வெங்கட் பிரபுவின் தரமான செலக்சன்

- Advertisement -spot_img

Trending News