புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வீட்ல விசேஷம் படத்தை வாங்காத உதயநிதி.. நக்கலாக பதிலளித்த ஆர் ஜே பாலாஜி

என் ஜே சரவணன் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் வீட்ல விசேஷம். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் பான் இந்திய படம் பெரிய அளவில் பேசப்படுகிறது.

ஆனால் கம்மி பட்ஜெட்டில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக ஆர்ஜே பாலாஜியின் வீட்டில் விசேஷம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா முரளி, ஷிவானி நாராயணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஆர் ஜே பாலாஜி எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்துள்ளார். படம் வெளியாகி 3 நாட்களில் 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி இடம் செய்தியாளர்கள் நிறைய கேள்விகள் கேட்டனர்.

அதில் கமலின் விக்ரம் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் லோகேஷ் என்னுடைய நெருங்கிய நண்பர் என ஆர் ஜே பாலாஜி கூறினார். மேலும், தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் கைப்பற்றி வருகிறது.

இந்நிலையில் வீட்ல விசேஷம் படத்தை மட்டும் ஏன் உதயநிதி வாங்கவில்லை என்ற கேள்வி ஆர் ஜே பாலாஜியிடம் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்ஜே பாலாஜி, ஏன் என் படத்தை வாங்கலாம்னு உதயநிதி சார் கிட்ட கேளுங்க என சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது வரை விக்ரம் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் 300 திரையரங்குகளுக்கு மேல் வீட்டில் விசேஷம் படம் வெளியாவதற்கு உதயநிதி உதவியதாகவும் ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தார். மேலும் கோபுரம் பிலிம்ஸ் போன்று பலர் வீட்டில் விசேஷம் படத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

மேலும் செய்தியாளர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் கலகலப்புடன் நக்கலாக ஆர்ஜே பாலாஜி பதிலளித்திருந்தார். கடைசியாக எல்லோரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து வீட்ல விசேஷம் படத்தை பார்க்கும்படி ரசிகர்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News