The reason why Ajith rejected Vignesh Shivan for AK62: சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களின் மூலமாக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை அமைத்துக் கொண்டார் விக்னேஷ்.
அஜித்தின் வெறித்தனமான ரசிகரான விக்னேஷ், அஜித் உடன் ஒரு படமாவது பண்ண மாட்டோமா என்று வாய்ப்புக்காக ஏங்கிய நிலையில் ஏகே 62 வில் அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் இணைய காலம் கைக் கூடி வந்தது. இது பற்றி மனம் திறந்த விக்னேஷ் ஏகே 62, நான் தான் பண்ண போறேன் என்றும் அஜித் என்னோட ஸ்டைல்ல படம் பண்றதுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் எனவும் பெருமையாக பேசினார்.
திடீரென லைகா நிறுவனம் ஏகே 62 ப்ராஜெக்ட்ல இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தெரிவித்ததும் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் இதை உறுதி செய்த விக்னேஷ் சிவனும் வலைதள பக்கத்தில் இருந்து அஜித்தின் பிக்சரையும் அஜித் படத்தின் நவர் கிவ் அப் என்ற வாசகத்தையும் நீக்கி இருந்தது தெரியவந்தது.
Also read: விக்னேஷ் சிவன் திரும்புற இடமெல்லாம் கன்னி வெடி தான்.. இதுல நயனை வேற கழட்டிவிட்ட கொடுமை
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் என விரக்தியின் விளிம்பில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக நயன்தாராவும் அஜித்திடம் தூது போக அதுவும் முடியாமல் முட்டுக்கட்டையானது. ஏன் அஜித் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் என்ற கேள்வியுடன் “ஜஸ்டிஸ் பார் விக்னேஷ் சிவன்” என்ற ஹேஸ்டேக் பல மாதங்களாக உலவி வருகிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூற பட்டாலும் முக்கிய காரணம், இரண்டு தடவை கதை கேட்க வர சொல்லியும் விக்னேஷ் சிவன் சரியான நேரத்திற்கு வராமல் காலம் தாமதித்தது ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் வோஸ்ட் ஆனது. இரண்டாவதாக ஏகே 62 ஆரம்பித்த சமயம் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ உருவாகி கொண்டிருந்தது தரமான ஆக்சன் படமுடன் விக்னேஷின் மெல்லிய பின்னணியை கொண்ட காதல் கதை செட்டாகுமா? என்பது ஒரு கணிப்பு.
மேலும் விக்னேஷ் சிவனின் கணக்குப்படி கதைக்கான பட்ஜெட்டும் மிக அதிகம் என்பதால் தயாரிப்பு நிறுவனமும் பின்வாங்கியது. விக்கி செஞ்சது தப்பாக இருந்தாலும் அதுக்கு இப்படியா அஜித் தடாலடியா விக்கி லைப்ப க்ளோஸ் பண்றது. இந்த சம்பவத்தை அடுத்து நயன்தாரா இரண்டு தடவை அஜித்தை அணுகியதாகவும் அஜித்திடம் எந்த ஒரு பாட்ஷாவும் பலிக்கவில்லை என்றபோதுதான் அடுத்த படத்திற்கு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவை அணுகினாராம் விக்னேஷ் சிவன்.
Also read: அஜித்தை டேமேஜ் செய்த அமரனின் விஷமிகள்.. சிவகார்த்திகேயன் கூலிப்படை செய்யும் வேலை