சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தலைவர் 171 போஸ்டரில் ரஜினி வாட்ச் கட்டியதன் காரணம்.. லோகேஷ் வைத்திருக்கும் மர்ம முடிச்சு

Lokesh and Thalaivar 171: ரஜினியை பொறுத்தவரை வெற்றிக்கு வயசு ஒரு தடையே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே வருகிறார். கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் மும்மரமாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகிவிடும். இதனை அடுத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் உடன் கூட்டணி வைத்திருக்கிறார். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை மார்ச் 28ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டு இருந்தார்கள்.

அதில் ரஜினி கையில் வாட்ச் அணிந்து இரு கைகளையும் ஒன்று சேர்ப்பது போல் சங்கிலியால் பின்னப்பட்டிருக்கும். அந்த வகையில் இப்படத்தின் கதை எதிர் எதிரான விஷயங்களில் பந்தயம் நடக்கும் அளவிற்கு கதை இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ரஜினியை வைத்து லோகேஷ் போட்ட பிளான்

இருந்தாலும் லோகேஷ் ஒரு மர்ம முடிச்சை வைத்து தான் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதாவது ஒரு நாளில் நடக்கும் கதையை தான் எடுக்கப் போகிறார்களாம். அதை சிம்பாலிக்காக காட்டுவதற்காகத்தான் அந்த கைக்கடிகாரத்தால் இரு கைகளையும் கட்டப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இதே மாதிரி ஒரு நாளில் நடக்கும் கதையைத்தான் கைதி மற்றும் மாநகரம் படங்களில் லோகேஷ் கொண்டு வந்தார். அதே மாதிரி தலைவர் 171 படத்திலும் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பான காட்சிகளுடன் ரஜினியை வைத்து உருவாக்கப் போகிறார்.

ஆனால் இந்த மாதிரி கதைகள் இளம் நடிகர்களாக இருக்கும் கார்த்தி போன்ற நடிகர்களுக்கு ஓகே. இது ரஜினிக்கு செட்டாகுமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் லோகேஷை பொருத்தவரை அவர் நினைத்தபடி காட்சிகள் வரவேண்டும் என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்.

அத்துடன் அவர் எடுக்கக்கூடிய படங்கள் லோகேஷ் பாணியில் தான் இருக்குமே தவிர ஹீரோக்களுக்காக எந்த இடத்திலும் கதையை மாற்ற விரும்ப மாட்டார். அப்படி இருக்கும் பொழுது ரஜினியை வச்சு செய்யும் அளவிற்கு லோகேஷ் ஒரு சம்பவத்தை செய்யப் போகிறார்.

கடைசியில் ஏன் தான் இவரிடம் மாட்டிக் கொண்டோம் என்று முழிக்கும் அளவிற்கு ரஜினியின் நிலைமை இல்லாமல் இருந்தால் சரி தான். மேலும் இதில் துளி கூட LCU கதை இருக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக லோகேஷ் கூறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான டீசர் மற்றும் படத்தின் டைட்டில் வருகிற ஏப்ரல் மதம் 22ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Trending News