மாமனார் கொடுத்த டார்ச்சர்.. தனிக்குடித்தனம் போன நடிகை

Gossip : நடிகை சில மாதங்களுக்கு முன்பு தனிக்குடுத்தனம் போன நிலையில் அதற்கான உண்மை என்ன என்று இப்போதுதான் வெளியாகி இருக்கிறது. குழந்தைகள் படிப்புக்காகவும், தனது பெற்றோர்களுக்காகவும் வெளியூரில் குடியேறியதாக கூறினார்.

ஆனால் குடும்பத்தில் உள்ள சண்டை காரணமாகத்தான் வெளியே வந்திருக்கிறார். அதாவது பாரம்பரியமிக்க குடும்பத்தில் உள்ள நடிகர் தன்னுடன் நடித்த நடிகையை காதலித்தார். ஆனால் இது நடிகரின் அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அவர்களது கல்யாணத்திற்கு தடை போட்ட நிலையில் நடிகர் அந்த பெண்ணை தான் கட்டிப்பேன் என்று ஒற்றை காலில் நின்றார். மகனுக்காக வேறு வழியில்லாமல் பிரம்மாண்டமாக திருமணத்தையும் நடத்தி முடித்தார்.

நடிகை தனிக்குடுத்தனம் போன காரணம்

ஆனாலும் மருமகளாக அந்த நடிகையை ஏற்றுக் கொள்ள மாமனாருக்கு விருப்பமில்லை. இதுவே வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட காரணமாக அமைந்தது. இருந்தாலும் நடிகை கொஞ்சம் பொறுத்து போய் இருக்கிறார்.

இப்போது குழந்தைகள் நன்கு வளர்ந்த பிறகு தனி கொடுத்தனம் போய்விட்டார். அதாவது மாமனார் ஒரு நாள் கடுமையாக திட்டிய நிலையில் இதையே காரணமாக வைத்து தனது சொந்த ஊரிலேயே குடி போய்விட்டாராம்.

நடிகரும் குழந்தைகள் மனைவிக்காக வேறு வழியில்லாமல் அவர்களுடன் வாழ்ந்து வருகிறாராம். இந்நிலையில் சமீபத்தில் பிரமாண்டமாக வீடு வாங்கி மாமனாராயே அசர வைத்து விட்டாராம் நடிகை.