திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஆசையில் தோனி.. இப்ப வரை விஜய் பச்சை கொடி காட்டாததற்கு காரணம்

Actor Vijay: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக இருக்கும் தோனி இப்போது தமிழ்நாட்டை குறிவைத்து பல விஷயங்கள் செய்து வருகிறார். அதில் அவர் இப்போது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஆசையில் விஜய்க்கு வலை வீசி இருக்கிறார். ஆனால் அதற்கான கிரீன் சிக்னல் தான் இன்னும் கிடைக்கவில்லை.

அதாவது தோனிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே அவர் தமிழ்நாட்டை குறி வைத்து தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அதாவது அவர் இப்போது தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

Also read: எல்லாத்துக்கும் எங்க தயவு வேணும் சாமி.. வாரிசு போல் லியோவையும் கண்ணசைவில் கண்ட்ரோல் பண்ணும் ரெட் ஜெயண்ட்

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடிப்பில் உருவான இப்படம் நேற்று வெளியாகி பரவலான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதை அடுத்து தோனி அடுத்ததாக யாரை வைத்து படம் தயாரிப்பார் என்ற பேச்சு தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உண்மையில் அவர் முதன் முதலில் விஜய்யை வைத்து தான் படம் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அது குறித்து பேச்சு வார்த்தை நடத்திய போது கூட விஜய் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் தற்போது அவர் வாங்கும் சம்பளம் தான்.

Also read: தோனிக்கு நம்ம சினிமா கற்றுக் கொடுக்கும் பாடம்.. சிஎஸ்கேவை மனதில் வைத்து தல ஆடும் ஆட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தை முடித்துக் கொடுத்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணைய இருக்கிறார். இப்படத்திற்காக அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படி இருக்கையில் தோனியிடம் எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்க அவர் தயங்கி இருக்கிறார். அதன் காரணமாகவே இந்த கூட்டணி இணைவதற்கு அவர் பச்சைக்கொடி காட்டாமல் அமைதி காத்து வருகிறார். இருப்பினும் தோனி சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வகையில் தன் முயற்சியை தொடங்கியுள்ளார்.

Also read: விஜய்யால் நெல்சனுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. தயாரிப்பாளரிடம் ரஜினி சொன்ன ஒத்த வார்த்தை

Trending News