சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நங்கூரம் போல் வடிவேலுக்கு மட்டுமே போட்ட ரெட் கார்டு.. அதைவிட மோசமாய் இருந்து எஸ்கேப் ஆன 2 நடிகர்கள்

நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது மாமன்னன் படத்தின் மூலமாகி ரீ என்ட்ரி கொடுத்த இவர், தற்போது சந்திரமூகி 2 படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வரும் வடிவேலு, கடந்த சில வருடங்களாக மார்க்கெட்டில்லாமல் இருந்து வந்தார்.

ஆனால் தொடர்ந்து இவரது நகைச்சுவை மீம்ஸ்கள் மூலமாக வலம் வந்து ரசிகர்கள் மனதில் மீம்ஸ்களின் மன்னன் என்ற பெருமையையும் பெற்றார். அதிலும் நேசமணி கதாபாத்திரம் கமெண்டுகள் மூலம் பிரபலமானதையடுத்து வடிவேலுவுக்கு பல படவாய்ப்புகள் வரத்தொடங்கியது. அந்த வகையில் வடிவேலு பல வருடங்கள் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது தான்.

Also Read: வடிவேலுக்கும், பிரம்மானந்தாக்கும் கமல் வைத்த செல்ல பெயர்.. வயிறு வலிக்க சிரித்த உலக நாயகன்

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிக்க இருந்த 24 ஆம் புலிகேசி படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க கமிட்டானார். மேலும் இப்படத்துக்காக 9 கோடிவரை சம்பளமாக வடிவேலு பெற்ற நிலையில், படப்பிடிப்புக்கு வராமலும், காசை திருப்பி கொடுக்காமலும் இழுத்தடித்தார். இதனால் இவருக்கு ரெட் கார்டு போடப்பட்டு படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டார்.

இப்படி தயாரிப்பாளர்களை அலைக்கழித்து ஒருமுறை ரெட் கார்டு போடப்பட்டால் அந்த நடிகர்கள் சில வருடங்களுக்கு படங்களில் நடிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதன் காரணமாகவே பல நடிகர்கள் தங்களது வேலைகளை சரியாக செய்து விடுகிறார்கள்.ஆனால் சில நடிகர்கள் ரெட்கார்டு போட்டாலும் பரவாயில்லை என மிதப்பில் இருந்துவருவது தான் வேடிக்கையாக உள்ளது.

Also Read: மாமன்னனுக்கு முன்னரே வடிவேலு சம்பவம் செய்த 5 படங்கள்.. நாசரிடம் கருப்பட்டியாக வாங்கிய அடி

அந்த வகையில், அண்மையில் நடிகர்கள் சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தயாரிப்பாளர்களுக்கு பண ரீதியாக பல இன்னல்களை கொடுத்தவர்கள். அதிலும் விஷால் மற்றும் சிம்பு இருவரும் தயாரிப்பாளர்களை நீதிமன்றத்தை நாடும் வரை பிரச்சனையை கொண்டு சேர்த்துள்ளனர். அந்த அளவுக்கு இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் கொடுத்த காசையும் கொடுக்காமல், படத்தில் நடிக்க கால்ஷீட்டும் கொடுக்காமல் உள்ளனர்.

இதன் காரணமாக இவர்களுக்கு தற்போது ரெட் கார்டு போடப்பட்டுள்ள நிலையில், இதெல்லாம் நடக்குற காரியமா என்பது போல் மெத்தனமாக உள்ளனர். காரணம் தற்போது விஷால் மற்றும் சிம்பு இருவரும் திரைத்துறையில் தங்களது மார்க்கெட்டை மறுபடியும் தொடங்கி ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் இவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்தாலும் இவர்களை அதிலிருந்து மீட்டு கொண்டு வர ஒரு கூட்டமே உள்ளது. ஆனால் வடிவேலுவுக்கு இப்படி யாரும் உதவி செய்யாததால் பல வருடங்கள் வீட்டிலேயே முடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சொகுசு கார், பிரம்மாண்ட பங்களா.. 63வது பிறந்தநாளில் வடிவேலுவின் வாயை பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

Trending News