திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

துணிவு, வாரிசால் வசமாக சிக்கிக் கொண்ட ரெட் ஜெயிண்ட்.. உதயநிதிக்கு தண்ணி காட்டும் முக்கிய புள்ளி

பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நாளில் ஒன்றாக திரையரங்குகளில் ரிலீஸானது. 8 ஆண்டுகள் கழித்து விஜய், அஜித் மோதிய இப்படங்களால், ரசிகர்கள் சமூகவலைத்தளம் முதல் திரையரங்கு வாசல் வரை தல, தளபதி சண்டையை போட்டு இணையத்தை அதகளப்படுத்தினர்.

அதிலும் முக்கியமாக துணிவு படம் பார்க்க சென்ற அஜித்தின் ரசிகரான 19 வயது நிரம்பிய இளைஞரின் மரணம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. மேலும் வாரிசு படத்தை காட்டிலும், துணிவு திரைப்படத்திற்கு திரையரங்குகள் கூடுதலாக கொடுக்கப்பட்ட நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கடுப்பாகி பல சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கெல்லாம் காரணம் உதயநிதி தான் என பல குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு தற்போது புது பிரச்சனை வந்துள்ளது.

Also Read: மீண்டும் இணையும் வாரிசு கூட்டணி.. தில் ராஜுக்காக எதுவும் செய்யத் துணிந்த விஜய்

துணிவு படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி விநியோகம் செய்த நிலையில், வாரிசு பட தயாரிப்பாளரின் தில் ராஜுவின் வேண்டுதலுக்கேற்ப விஜய்யின் வாரிசு படத்தை சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி விநியோகம் செய்தது.

இருந்தாலும் வசூல் ரீதியாக வாரிசு படத்தை வீழ்த்த உதயநிதியின் பக்கம் உள்ளவர்கள் சில சதி வேளைகளில் ஈடுபட்டுள்ளனர் என பிரபல சமூக ஆர்வலர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். துணிவு படத்தை காட்டிலும் விஜய்யின் வாரிசு படத்தை சமூக வலைத்தளத்தில் திரைப்பட விமர்சகர்களாக இருக்கும் சிலரிடம் பணம் கொடுத்து வாரிசு படத்தை தோல்வி படமாக அறிவிக்கும்படி பேசப்படுவதாக தெரிவித்தார்.

Also Read: ஊத்தி மூட இருந்த ரெட் ஜெயண்ட்.. கடைசி நேரத்தில் உதயநிதிக்கு கண்ணை திறந்து விட்ட புண்ணியவான்

மேலும் ஆட்சியில் உள்ள உதயநிதி தமிழ் சினிமாவை தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்டிப்படைத்து வருகிறார் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார். இவரது பேச்சு சர்ச்சையான நிலையில், தற்போது இவரது குற்றச்சாட்டு மனு ஆளுநர் வரை சென்று மத்தியில் உள்ள உள்துறை அமைச்சர் அமிட்ஷாவிடம் பேசி உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸின் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவை கொண்டு ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார்.

ஏற்கனவே மத்தியில் ஆளும் ஒன்றிய அரசுக்கும், தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கும் பல கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையில், உதயநிதியை வைத்து ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதி என உதயநிதி தரப்பு கொந்தளித்து வருகின்றனர். தற்போது இந்த பிரச்னையை உதயநிதி எதிர்கொண்டு, ரெட் ஜெயிண்ட் மூவிஸை காப்பாற்றுவாரா, இல்லையா என்பது தான் பெரும் கேள்வியாக உள்ளது.

Also Read: மறைமுகமாக காய் நகர்த்திய உதயநிதி.. தளபதி 67 படத்திற்கு பின் அஸ்தான இயக்குனருடன் இணையும் விஜய்

Trending News