வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கொழுந்துவிட்டு எரியும் வாரிசு, துணிவு விவகாரம்.. பகிரங்க மிரட்டல் விடுத்த ரெட் ஜெயிண்ட்

மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாரிசு, துணிவு இரண்டு படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் துணிவு படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் வாரிசுக்கு எதிர்பார்க்காத அளவிற்கு மோசமான விமர்சனங்கள் முதல் நாளிலேயே எழுந்தது. ஆனால் இதற்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சில முக்கிய விஷயங்களும் அம்பலமானது.

அதாவது அரசியல் பிரபலமான சவுக்கு சங்கர் தற்போது திரையுலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி வாரிசுக்கு எதிராக சில வேலைகளை செய்வதாக கூறினார். இது குறித்து பட ரிலீஸுக்கு முன்பே அரசல் புரசலாக சில செய்திகள் வெளி வந்தாலும் சவுக்கு சங்கர் ஆணித்தரமாக ஒரு விஷயத்தை கூறியிருந்தார். அதாவது விநியோகஸ்தர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி விஜய்யை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்ட ப்ளான் செய்து வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Also read: வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா-க்கு போட்டியாக ரிலீஸ் ஆன வாரிசு.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அதற்கான ஒரு முன்னோட்டம் தான் இந்த வாரிசு திரைப்படத்திற்கு எதிராக நடக்கும் சதி என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் மற்றொரு விஷயத்தையும் அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதாவது வர்த்தக ஆய்வாளர் ஒருவர் துணிவு திரைப்படத்தை விட வாரிசு படத்தின் வசூல் தான் அதிகம் என்று ஒரு ட்வீட் போட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் போனி கபூரின் முன்னாள் பணியாளரும், தற்போதைய ரெட் ஜெயிண்ட் செண்பகமூர்த்தியின் வலது கையுமான ராகுல் ட்விட்டரில் பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது அவர் போட்டுள்ள பதிவில் துணிவுடன் நேரில் வந்து துணிவு கலெக்சன் பற்றி தெரிந்து கொள்ளவும். அப்போது உங்களுக்கு உண்மை என்ன என்று தெரியும், ஹேப்பி துணிவு பொங்கல் ப்ரோ என பதிவிட்டுள்ளார்.

Also read: துணிவு பட வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணம்.. வினோத்துக்கு முதுகெலும்பாக இருந்த மேதை

இதை அப்படியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டு இருக்கும் சவுக்கு சங்கர் இது குறித்து தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் அஜித் ரசிகர்களுக்கு பல வருடங்களாக யார் பெரியவர் என்ற வாய்க்கா தகராறு இருந்து வருகிறது.

thunivu-red-gient
thunivu-red-gient

அதை ஏற்றி விடுவது போல் இப்போது ஒவ்வொரு விஷயங்களும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு எதிராக பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கிறது. மேலும் விஜய்யின் பிசினஸை யாராலும் உடைக்க முடியாது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also read: 12 ஆயிரம் கோடி நிஜ கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டிய வினோத்.. துணிவு படத்தில் மறைந்திருக்கும் உண்மை

Trending News