சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மொத்தமாக சுத்தலில் விடும் லோகேஷ்.. அர்ஜுனுக்கும், சஞ்சய் தத்துக்கும் உள்ள தொடர்பு

லியோ படம் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு செய்தி வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் இப்போது சோசியல் மீடியாவை திறந்தாலே விஜய், லோகேஷ் பற்றிய செய்திகள் தான் குவிந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு லியோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமே படத்தில் இருக்கும் நட்சத்திர பட்டாளங்கள் தான். ஏனென்றால் படத்தில் எத்தனை பேர் தான் நடிக்கிறார்கள் என்று அனைவரும் குழப்பம் அடையும் அளவுக்கு அனைத்து மொழிகளில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களையும் லோகேஷ் லியோவில் சங்கமிக்க வைத்துள்ளார்.

Also read: காது குத்திய லோகேஷ்.. ரொம்ப பேசக்கூடாது, படத்தில் வில்லனுக்கு பெரிய ஆப்பு

அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் என பெரிய கூட்டமே நடித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் வெளியில் தெரியாத சில சர்ப்ரைஸ் கதாபாத்திரங்களும் இருக்கிறார்களாம். இப்படி ஒரு கூட்டத்தையே நடிக்க வைத்து வரும் லோகேஷ் என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.

மேலும் யாருக்கு எந்த கதாபாத்திரம் என்று தெரியாமல் ரசிகர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர். அது மட்டுமின்றி இத்தனை கதாபாத்திரங்களும் ஒரு சீனுக்கு வந்தாலே மூன்று மணி நேரம் முடிந்து விடுமே என்ற கேள்வியும் எழ தவறவில்லை. இப்படி ஒரு விவாதத்தை தான் லியோ மூலம் லோகேஷ் உருவாக்கி இருக்கிறார். இருப்பினும் இத்தனை நடிகர்களையும் திரையில் ஒரு சேர பார்க்க ஆடியன்ஸும் ஆர்வமாக தான் இருக்கிறார்கள்.

Also read: விஜய்க்காக இறங்கி வந்த பவானி.. ஷாக் மேல் ஷாக் கொடுத்து லோகேஷ் செய்யும் சம்பவம்

அந்த வகையில் அர்ஜுனுக்கும், சஞ்சய் தத்துக்கும் இந்த படத்தில் என்ன கேரக்டர் என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது. அதாவது அவர்கள் இருவரும் இப்படத்தில் அண்ணன் தம்பிகளாக நடிக்கிறார்களாம். அதில் சஞ்சய் தத், விஜய்க்கு நேரடி வில்லனாகவும் அவரின் தம்பியாக வரும் அர்ஜுன், விஜய் கூடவே இருந்து குழிப்பறிக்கும் கேரக்டரிலும் நடித்து வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க விஜய் இப்படத்தில் லியோ, பார்த்திபன் என இரு மாறுபட்ட தோற்றத்தில் வந்து ரசிகர்களை கலங்கடிக்க இருக்கிறார். இப்படி பல விஷயங்கள் கசிந்து வந்தாலும் படத்தை பார்த்தால் தான் எதுவும் சொல்ல முடியும். அந்த வகையில் இப்போது லோகேஷ் அனைவரையும் மொத்தமாக சுத்தலில் விட்டிருக்கிறார் என்பது தான் உண்மை.

Also read: ஜெயிலர், லியோ கொடுத்த தைரியம்.. சரசரவென தீபாவளிக்கு வரிசை கட்டும் 4 படங்கள்

Trending News