RipDanielBalaji: 48 வயதில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார் நடிகர் டானியல் பாலாஜி. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. டேனியல் பாலாஜியை கடைசியாக திரையில் பார்த்தது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் மூலம் தான்.
கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் டானியல் கருப்பன் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். டேனியல் பாலாஜிக்கு தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமாக்களிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
அவருடைய மறைவு செய்தியை கேட்ட பிறகு சமூக வலைத்தளம் முழுக்க அவர் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்கள் தான் வெளியாகி வருகிறது. அவருடைய நடிப்பில் வெளியான சிறந்த காட்சிகள் மற்றும் அவருடைய பேட்டிகள் நிறைய வைரலாகி கொண்டிருக்கின்றன.
இதில் ரொம்பவும் முக்கியமாக கவனிக்கப்பட்ட விஷயம் தான் டேனியல் பாலாஜி மற்றும் நடிகர் விஜய் இருவருக்கும் இடையே இருந்த அழகான உறவு. டேனியல் பாலாஜி ஏற்கனவே கமல் மற்றும் தனுஷ் இருவருடன் இணைந்து தன்னுடைய பெஸ்ட் கொடுத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் உடன் இரண்டு படங்களில் இணைந்து இருக்கிறார். இதில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த பைரவா படத்தில் கோட்டை வீரன் என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜியின் வில்லத்தனமான நடிப்புக்கு இன்னும் மெருகேற்றுவது அவருடைய ஹேர் ஸ்டைல் தான்.
விஜய்யை மெர்சலாக்கிய டேனியல் பாலாஜி
ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் உண்மையிலேயே மொட்டை அடிக்க வேண்டியது இருந்திருக்கிறது. டேனியல் பாலாஜி அதற்கு ஓகே சொன்னாலும், நடிகர் விஜய்க்கு அதில் சம்மதம் இல்லை.
விஜய், பாலாஜி இடம் நீ இப்ப கூட நோ சொல்லு, நான் டைரக்டர் கிட்ட பேசிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பாலாஜி இந்த கேரக்டருக்கு அந்த சீன் ரொம்ப முக்கியம் என்று சொல்லி மொட்டை அடித்திருக்கிறார்.
டேனியல் பாலாஜியின் நடிப்பு திறமையை பார்த்து தான் அடுத்து பிகில் படத்தில் விஜய் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது விஜய், டேனியல் பாலாஜி பற்றி பேசியிருக்கிறார். அதில் டேனியலின் சினிமாவில் நடித்த வில்லத்தனம் பற்றி தான் உங்களுக்கு தெரியும்.
ஆனால் உண்மையில் அவர் ரொம்பவும் நல்ல மனிதர், கடவுள் பக்தி நிறைந்த இவர் அம்மன் கோவில் எல்லாம் கட்டிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.
டேனியல் பாலாஜி விஜய் பற்றி அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய போது, விஜய் பைரவா படத்தில் என்னை பார்க்கும் பொழுது வாங்க அண்ணா, எப்படி இருக்கீங்க என்று தான் பேசினார். ஆனால் பிகில் படப்பிடிப்பு போது வாங்க நண்பா என்று கூப்பிட்டார். அவர் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டது ரொம்பவும் சந்தோஷம் என மனம் நெகிழ்ந்து பேசியிருந்தார்.