டோலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக அசத்தியவர் பிரபாஸ். பாகுபலி இவரின் இமேஜ்ஜை மாற்றியது. தற்போது பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதியை, அவருடைய 43-வது பிறந்த நாளான இன்று படக்குழு புதிய போஸ்டருடன் வெளியிட்டு அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறது.
இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்தப் படத்தை இயக்கிய ஓம் ராவத்துக்கு தயாரிப்பாளர் 4 கோடிக்கு சொகுசு கார் வாங்கி பரிசாக அளித்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
Also Read: 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ஜோடி இவர் தானாம்! சீதைக்கு செட் ஆவாரா?
தற்போது படக்குழு வெளியிட்டிருக்கும் புதிய போஸ்டரில் ராம அவதாரத்தில் பிரபாஸும் கம்பீரமாக காட்சி அளிப்பதுடன் இந்த படத்தை ஜனவரி 12ஆம் தேதி 3 டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் ரெடியாகி இருக்கும் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதில் ராமராக பிரபாசும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிக்கிறார்கள். மிகப் பெரிய பொருட் செலவில், இதுவரை கண்டிராத பிரம்மாண்ட படைப்பாக இந்த படம் உருவாகி உள்ளது.
Also Read: படமே இன்னும் ரிலீஸ் ஆகல.. தோல்வி பயத்தில் பல கோடியில் பரிசளித்த பிரபாஸ்
இந்திய சினிமாவில் விஃஎப்எக்ஸ் (VFX ) ஷாட்களை கொண்ட படமாக பாகுபலி ரெடியானது. அந்த சாதனையை இந்த ஆதிபுருஷ் முந்தப்போகிறது. பாகுபலி 2 படத்தில் அதிகபட்சமாக 2500 விஷுவல் எஃபெக்ட் ஷாட்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆதிபுருஷ் படத்தில் 8000 விஎஃப்எக்ஸ் ஷாட்கள் வைக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
ஆகையால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தை உலகெங்கும் இருக்கும் சினிமா ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்க்க காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி தற்போது வெளியாகியிருக்கும் ஆதிபுருஷ் படத்தின் போஸ்டரும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
Also Read: பெரும் ஏமாற்றத்தை கொடுத்த ஆதிபுருஷ் டீசர்.. இதுக்கு விஜய் டிவி ராமாயணமே பரவால்ல