திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கேலி, கிண்டலுக்கு உள்ளான சந்திரமுகி 2.. பயத்தில் ரிலீஸ் தேதியை தள்ளி போட்ட லாரன்ஸ்

Chandramukhi 2: ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தை இப்போது டிவியில் போட்டாலும் ரசிகர்கள் பார்ப்பதுண்டு. அந்த அளவுக்கு ரசிகர்களின் விருப்பமான படமாக இருக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்கி இருக்கிறார். லைக்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார் போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வீடியோ வெளியாகி இருந்தது.

Also Read : ஜோதிகா எல்லாம் ஒண்ணுமே இல்ல, கங்கனாவுக்கு லாரன்ஸ் மாஸ்டர் போட்ட சோப்பு.. நச் பதிலடி கொடுத்த ஜோ

அதில் கங்கனா ரனாவத் தோற்றம் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகள் சரியில்லாத காரணத்தினால் இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளானது. மேலும் சந்திரமுகி 2 படம் வெளியாகும் நாளில் விஷாலின் மார்க் ஆண்டனி படமும் வெளியாகிறது. எஸ்ஜே சூர்யா மற்றும் விஷால் காம்போவில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று இருக்கிறது.

இவ்வாறு விஷால் படத்திற்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில் சந்திரமுகி 2 படம் கிண்டலுக்கு உள்ளாகி வருவதால் இப்போது படத்தை ரிலீஸ் செய்தால் பாதிப்பு ஏற்படும் என படக்குழு அஞ்சி இருக்கிறது. இதனால் படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகளை இப்போது மும்மரமாக செய்து வருகிறார்களாம்.

Also Read : 46 வயதில் பெயர் மாற்ற என்ன காரணமோ.. வெளியில் வரும் ராகவா லாரன்ஸ் பூசிய சாயம்

மேலும் இதில் சில மாற்றங்கள் இருப்பதால் இப்போதைக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2 படத்தை ரிலீஸ் செய்ய லாரன்ஸ் முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் அப்போது பெரிய படங்கள் வேறு எதுவும் வெளியாகவில்லை.

தனிக்காட்டு ராஜாவாக சந்திரமுகி 2 படத்தை வெளியிட்டால் முதல் நாளில் நல்ல கலெக்ஷனை அள்ளிவிடலாம் என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பு ரிலீஸ் தேதி இப்போது தள்ளி போய் உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றத்தை அடைந்திருக்கிறார்கள்.

Also Read : ரஜினியின் சிஷ்யனாய் இருந்தும், கமலை அசிங்கப்படுத்திய லாரன்ஸ்.. மொத்த சங்கதியும் வெளியான அம்பலம்

Trending News