சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ரிலீஸ் தேதியை லாக் செய்த நெல்சன்.. மீண்டும் இளமையுடன் வந்த ஜெயிலர் ரஜினியின் வீடியோ

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இந்த படத்தின் மூலம் தரமான வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தமன்னா, யோகி பாபு, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இதில் ஜெயிலராக முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

Also Read : போதாது போதாது என சம்பாதித்ததை மொத்தமாக தொலைத்த 5 நடிகர்கள்.. தனக்குத்தானே குழி வெட்டிய ரஜினி

இந்நிலையில் ரிலீஸ் தேதியுடன் ஒரு வீடியோவை ஜெயிலர் பட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் எல்லா கதாபாத்திரங்களையும் காண்பித்து கடைசியாக மாஸ் லுக்கில் ரஜினி வருகிறார். ரஜினி பார்ப்பதற்கு இளமையாக காரில் இருந்து வரும் காட்சி இடம் பெற்றுள்ளது.

மேலும் ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்போது அதற்கு போட்டியாக ஜெயிலர் படமும் வெளியாகிறது.

Also Read : அடுத்தடுத்து திரை உலக மரணங்களா.? சரத்பாபு இறந்ததாக கிளம்பிய புரளி, ஷாக் ஆனா ரஜினி

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் முன்னதாக ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆசைப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read : மன அழுத்தத்தால் திருமணமானதை மறந்த நடிகை.. தனக்கே தண்டனை கொடுத்துக் கொண்ட ரஜினி பட நடிகை

Trending News