வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மிகுந்த மன உளைச்சலில் விக்ரம்.. மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்திய அடுத்த பட ரிலீஸ்

சீயான் விக்ரமுக்கு சமீபத்தில் உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அதன்பின்பு சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளார். இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரமால் கலந்து கொள்ள முடியவில்லை. அதன்பின்பு கோப்ரா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களிடம் பேசினார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ளது. இப்படத்திற்கு முன்னதாகவே விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் விக்ரம் பத்திற்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. டிமான்டி காலனி படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரித்துள்ளார். இதில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் போன்றோர் நடித்துள்ளனர்.

கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் தற்போது வரை இப்படத்தின் சாட்டிலைட் உரிமை இன்னும் விலை போகவில்லையாம். மேலும் படத்திற்கான வேலை இன்னும் பாதி இருக்கிறதாம். இதனால் அறிவிக்கப்பட்ட தேதியில் படத்தை வெளியிடுவது மிக கடினமாம்.

கோப்ரா படத்தை பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இந்த விஷயம் மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை போய்கொண்டிருந்தது.

அதாவது படத்திற்கு சொன்ன பட்ஜெட்டை விட இயக்குனர் அதிகமாக செலவழித்ததாக கூறப்பட்டது. ஒருவழியாக அந்த பிரச்சினை முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் படத்தை வெளியிடுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்ரம் தற்போது மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்.

Trending News