உதயநிதி தற்போது அரசியல், சினிமா என இரண்டிலும் சுற்றி சுற்றி வேலை பார்த்து வருகிறார். நிற்கக்கூட நேரம் இல்லாத அளவிற்கு படு பிஸியாக வேலை செய்து வருகிறார். தற்போது மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலும் நடிக்கிறார்.
இப்போதெல்லாம் படத்தில் நடிப்பதை காட்டிலும் படத்தை வாங்கி வெளியிடுவதில் தான் ஆர்வம் அதிகம் காட்டி வருகிறார் உதயநிதி. தற்போது வெளியாகும் டாப் நடிகர்களின் படங்கள் எல்லாம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் கைவசம் தான் செல்கிறது. அஜித் நடித்த வரும் துணிவு படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
Also Read :வந்தா மலை போனா மசுரு.. வாரிசை ஒரு கை பார்க்க, துணிவுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த உதயநிதி
எல்லா படங்களுமே உதயநிதியை நாடி வர ஒரு முக்கிய காரணமும் உள்ளது. ஏனென்றால் அவரிடம் கணக்கு வழக்கு எல்லாமே சரியாக இருக்கிறதாம். லாபம் வந்த உடனே தயாரிப்பாளர்களுக்கு அவர்களது பங்கை கொடுத்து விடுகிறார்கள். படத்தை விநியோகஸ்தர்கள் இடம் கொடுத்தால் எப்படியும் ஒரு வருடம் இழுத்து விடுவார்கள்.
ஆனால் உதயநிதி உடனுக்குடன் செட்டில் செய்து விடுகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் சந்தோஷமாக இருந்தாலும் விநியோகஸ்தர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.
ஏனென்றால் எல்லா படத்தையும் உதயநிதி வெளியிடுவதால் எங்கள் வயிற்றில் அடிக்கிறீர்களே என்று விநியோகஸ்தர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இதனால் தற்போது அவர்களுக்கு தமிழ் சினிமாவில் வேலை இல்லாமல் போய் உள்ளது.
பொழப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு விநியோகஸ்தர்கள் வேறு மாநில படங்களை வெளியிட முடிவு செய்து அங்கு சென்று இதே தொழிலை பார்த்து வருகிறார்கள். உதயநிதியால் இப்படி அகடதேசம் சென்று பொழப்பு நடத்த வேண்டி உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
Also Read :17 படங்களில் இவ்வளவு கோடி லாபமா? ரெட் ஜெயண்ட் உதயநிதி போட்டிருக்கும் தந்திரம்