செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மார்க் ஆண்டனி சிலுக்குக்கும் நிஜ சிலுக்குக்கும் இவ்வளவு ஒற்றுமையா.? ஜொள்ளு விடும் மீசக்கார மாமா

Silk Smitha – Mark Antony: விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன மார்க் ஆண்டனி படம் வசூல் வேட்டையாடி வருகிறது. நடிகர் விஷாலுக்கு இதுவரை கொடுக்காத வெற்றியை இந்த படம் கொடுத்திருக்கிறது. எஸ் ஜே சூர்யா வழக்கம் போல தன்னுடைய நடிப்பால் ஸ்கோர் செய்து விட்டார். பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் பாசிட்டிவ் ரிவியூ மட்டுமே இந்த படத்திற்கு கிடைத்திருக்கிறது.

தியேட்டரில் ஒரு காட்சிக்கு மட்டும் பயங்கரமான ரெஸ்பான்ஸ் இருந்தது என்றால் அது சில்க் வரும் காட்சி தான். டைம் ட்ராவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த கதையில் 90களில் வாழ்ந்த சில்க்கை மீண்டும் கண் முன் கொண்டு வந்திருந்தார்கள். முதலில் இது கிராபிக்ஸ் என நினைத்தவர்களுக்கு உண்மையிலேயே சில்க்கின் தோற்றம் கொண்ட ஒரு பெண்ணை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்த பின் ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது.

Also Read:கைராசியான எஸ்.ஜே சூர்யா நடித்து வெற்றி கண்ட 5 ஹீரோக்கள்.. விஷாலை தூக்கி விட்ட நடிப்பு அரக்கன்

விஷ்ணு பிரியா என்பவர் மூலம்தான் 2k கிட்ஸ்களுக்கு சில்க்கின் தரிசனத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். விஷ்ணு பிரியா முதலில் டிக் டாக் வீடியோக்கள் பண்ணும் பொழுது பலரும் இவர் சில்க் மாதிரி இருக்கிறார் என கமெண்ட் செய்து வந்தார்கள். தற்போது அவரை ஞாபகம் வைத்து சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

விஷ்ணு பிரியா தோற்றத்தில் மட்டும் சில்க் ஸ்மிதா போல் இல்லை, இவர்கள் இருவருக்கும் அதையும் தாண்டி பல ஒற்றுமைகள் இருக்கிறது. நடிகை சில்க் 1996 இல் இறந்து விட்டார். விஷ்ணு பிரியா அதற்கு அடுத்த ஆண்டு 1997 இல் பிறந்திருக்கிறார். இருவருமே ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். இருவருமே தமிழ் பேசும் தெலுங்கர்கள். அதேபோல் இருவருக்குமே உடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி தான்.

Also Read:2K கிட்சுக்கு கிடைத்த சில்க் தரிசனம்.. தியேட்டரையே அலறவிட்ட மார்க் ஆண்டனி

உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என சொல்வதுண்டு. விஷ்ணு பிரியாவிற்கு சில்க்கின் உருவ ஒற்றுமை இருப்பதோடு இப்படி நிறைய விஷயங்கள் ஒத்துப் போவது, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு அவர் கலந்து கொண்ட பேட்டிகளின் போது தான் தெரிந்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

இவர் சிலுக்கை போல் இல்லை, சில்க் அழகிற்கு யாரும் வர முடியாது என அவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை கொட்டினாலும், அந்த ஒரு காட்சியில் ஒரு நிமிடம் மறைந்த சில்க் ஸ்மிதாவை விஷ்ணு பிரியா கண் முன் கொண்டு வந்து விட்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிலும் அந்த காட்சியில் எஸ் ஜே சூர்யா வின் பெர்பார்மன்ஸ் அடி தூள் கிளப்பி இருந்தது.

Also Read:Mark Antony Movie Review- பல தோல்வியால் மூச்சு திணறிய விஷால், மார்க் ஆண்டனியாக தல தப்பினாரா.? முழு விமர்சனம்

Trending News