Minister Udhayanidhi Stalin: டாப் நடிகர்களின் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் திரையரங்குகளில் விநியோகம் செய்கிறது. திரையரங்கு உரிமையாளர்களின் மத்தியில் உதயநிதி பேச்சுக்கு வேறு பேச்சே கிடையாது. இப்போது அரசியலிலும் தீவிரமாக செயல்படுற உதயநிதி, சர்ச்சைக்குரிய நடிகருக்கு மட்டும் ஓரவஞ்சகம் காட்டுகிறாரா! என்று நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.
சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் லியோ படத்திற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கும் அதிகாலை காட்சியை ரத்து செய்துவிட்டனர். அதுலயும் லியோ படத்துக்கு ரொம்பவே ட்ரை பண்ணாங்க, கிடைக்கல. இதற்கு காரணம் கோர்ட்டு உத்தரவு என்று சொல்லி தப்பிச்சுட்டாரு உதயநிதி.
இப்ப தமிழ்நாடு இவங்க கையில தான் இருக்கு. அப்படி இருக்கும்போது இவர்கள் சொல்றதுதான் நடக்கும். பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படம் வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்போ அயலான் படத்துக்கு மட்டும் மார்னிங் ஷோ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read: 22 வருடங்களாக விஜய்க்கு கிடைக்காத வாய்ப்பு.. சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த அஜித்
உதயநிதி ஸ்டாலின் மேல் இருந்த மரியாதையே போய்விட்டது
இதைவிட கேவலம் வேற எதுவுமே இல்ல. பிடிச்ச ஆக்டர்களின் படத்துக்கு மட்டும் ஓகே சொல்றாங்க. பிடிக்காத நடிகர்களுக்கு நோ சொல்றது எந்த விதத்தில் நியாயம். ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கும் உதயநிதிக்கும் ஆகாது. அதுக்காக லியோ படத்திற்கு அதிகாலை காட்சிகளை எல்லாம் ரத்து செய்வது கொஞ்சம் ஓவர் தான்.
இப்படி எல்லாம் பண்றத பார்த்தால் உதயநிதி மேல இருந்த மரியாதையே போச்சுன்னு, தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொந்தளிக்கின்றனர். அதுமட்டுமல்ல அயலான் படத்தில் ஏலியன் காட்டப்படுவதாலும், நிறைய விஎஃப்எக்ஸ் காட்சிகள் இருப்பதால் இந்த படத்தின் மீது குழந்தைகள் முதல் பெரியவர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோட இப்ப அதிகாலை காட்சியும் கொடுக்கப்பட்டதால் வசூல் பிச்சிக்கிட்டு போகப்போகுது.
Also Read: அயலான் அதிகாலை காட்சிக்கு அனுமதி உண்டா?. தயாரிப்பு நிறுவனத்தால் ஏற்பட்ட குழப்பம்