தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் கிட்டத்தட்ட 70 வருட காலமாகவே பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற முயற்சி செய்தனர். ஆனால் மணிரத்னம் கனவு கண்டது மட்டுமல்லாமல், தன்னுடைய திரைகனவை நனவாக்கி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸ் செய்து திரையரங்கில் தாறுமாறாக வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறார்.
வெளியான சில நாட்களிலேயே 300 கோடியை எட்டிய பொன்னியின் செல்வன் படத்தின் அசுர வேட்டை திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு பொன்னியின் செல்வன் பெரிய புதையல் என்று சொல்லலாம்.
Also Read: இந்த ஆண்டு வசூல் வேட்டை ஆடிய டாப் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விரட்டிப் பிடிக்கும் பொன்னியின் செல்வன்
ஏனென்றால் இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் எடுப்பதற்கு மொத்தம் 250 கோடி தான் செலவானது. அப்படிப் பார்த்தால் போட்ட காசை முதல் பாகத்திலேயே எடுத்துவிட்டு லைக்கா இரண்டாவது பாகம் முழுவதும் அதனுடைய லாபமாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகமும் தயாராகி ரிலீசுக்கு ரெடியா இருக்கும் நிலையில், இன்னும் சில மாதங்களில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகமும் வெளிவரப் போகிறது. ஏற்கனவே முதல் பாகம் எதிர்பார்ப்பை விட வசூல் உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் காட்டில் பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.
Also Read: 7 நாள் வசூலில் அடித்து நொறுக்கும் பொன்னியின் செல்வன்.. புதுப்படங்களை இறக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 130 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும் இது வரைக்கும் குறைந்த நாட்களில் 100 கோடிக்கு மேல் தமிழ்நாட்டில் மட்டும் எந்த படங்களும் வசூல் சாதனை படைக்கவில்லை முதல்முறையாக பொன்னியின் செல்வன் இந்த சாதனையை படைத்துள்ளது.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாம் பாகத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார். தற்போது விறுவிறுப்பாக பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தின் பட வேலைகள் நடைபெற்றுவருகின்றன, கூடிய விரைவில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தை வெளியிட்டு லைக்கா புரொடக்ஷன்ஸ் லாபத்தை அள்ள காத்திருக்கிறது.
Also Read: 300 கோடியை தாண்டி வசூல் செய்த 6 படங்கள்.. ஆறே நாட்களில் சாதனையை முறியடித்த பொன்னின் செல்வன்