வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் புதுசு இல்லையா? ஆனாலும் இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் படம் வெளியாகி பத்தே நாட்களில் கிட்டத்தட்ட 300 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் கமலஹாசனின் படங்கள் இதுவரை இந்த அளவுக்கு வெற்றியை பார்த்ததில்லை. இதனால் கமல் விக்ரம் படக்குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கி வந்தார்.

அந்தவகையில் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு கோடி மதிப்பிலான கார் மற்றும் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக் ஆகியவற்றை அன்பளிப்பாக கமல் வழங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து சம்பளமே வாங்காமல் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.

இதனால் கமல் சூர்யாவுக்கு சமீபத்தில் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார். தற்போது அந்த வாட்ச் புதிது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமலஹாசன் அந்த ரோலக்ஸ் வாட்சை பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறாராம்.

அதே நேரத்தில் அந்த வாட்ச் மீது கமலுக்கு ஒரு சென்டிமென்ட்டும் உள்ளதாம். ஆனாலும் சூர்யாவுக்காக இவ்வளவு நாள் பாதுகாப்பாக வைத்திருந்த அந்த ரோலக்ஸ் வாட்சை கமல் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அதே போல் விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் ரோலக்ஸ் ஆக அமைந்ததும் மிகச் சிறப்பாக இருந்தது.

மேலும் சிவக்குமார் மற்றும் கமலஹாசன் இருவரும் சகோதரர்கள் போலவே பழகி வருகிறார்கள். அதேபோல் சிவகுமாரின் மகன் சூர்யா கமலஹாசனை தன் அண்ணன் ஆகவே பாவித்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Trending News