வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தல61 படத்தில் ஜோடியாக நடிக்கும் தளபதி பட நாயகி.. காட்டுத்தீ போல் பரவும் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் தான் தல அஜித். இவர் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படத்திற்கு பிறகு தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் எப்படியாவது சீக்கிரம் முடித்துவிட்டு வலிமை படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

மேலும் வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் 61வது படத்தையும் வினோத் இயக்க வாய்ப்பு இருக்கிறதாம். இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் அஜித்தின் 61வது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

thala61-cinemapettai

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மெர்சல் படத்தில் தளபதியுடன் நித்யாமேனன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹிட் அடித்தார்.

தற்போது தல அஜித், நித்யா மேனன் ஜோடி சேர்ந்தால் தூக்கலாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ஆர்வத்துடன் இருகின்றனர்.

Trending News