வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சீரியலில் எல்லைமீறி வரும் காட்சிகளுக்கு வச்ச ஆப்பு.. இனி குடும்பத்துடன் பார்ப்பதற்கு எந்த பங்கமும் இல்ல

Serial: சின்னத்திரை மூலம் வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் வீட்டிலும் தினமும் சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே தான் இருக்கும். இதனால் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த சீரியல்களை பார்க்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.

ஆனால் ஒரு காலத்தில் குடும்ப பாங்கான காட்சிகளுடன், செண்டிமெண்டாக கண்ணீர் கதை என்று குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படியான காட்சிகள் அமைந்தது. தற்போது இதற்கு எதிர் மாறாக சில சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது எல்லை மீறிய காட்சிகளுடன் நடிப்பது, அதிகமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி, எப்படி ஒருத்தரை ஒருவர் பழிவாங்க வேண்டும் என்ற விஷயங்கள் அதிகமாக காட்டப்பட்டு வருகிறது.

அதிலும் ஒரு நெகட்டிவ் கேரக்டர் என்றால் அவருடைய குணங்கள் அனைத்தும் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு சமூகத்திற்கு சில கெட்டதுகளை சொல்லும் விதமாக இருப்பதால் சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது சின்ன குழந்தைகளும் சீரியல் பார்க்க ஆரம்பித்ததால் இவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஒரு குற்றம் வைக்கப்பட்டிருக்கிறது.

அதனால் ஒட்டுமொத்த குடும்பங்களும் பார்ப்பதால் சின்னத்திரை மூலம் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நல்ல கருத்துக்களை தெரிவிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற வேண்டும். அதற்காக வெளிவரும் அனைத்து சீரியல்களையும் தணிக்கை செய்து அதன் மூலம் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

வரம்பு மீறிய காட்சிகள் அதிகரித்து வருவதால் வருங்கால தலைமுறைகள் பாதிக்கப்பட்டு சமூக சீர்கேடு ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் சின்ன திரையில் தணிக்கை வாரியத்தை உருவாக்கி அதன் மூலம் சான்றிதழை பெற்ற பின்பே ஒவ்வொரு சீரியல்களையும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்தின் இயக்குனர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு பிறப்பித்திருக்கிறது.

இந்த வழக்கு பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் சில சேனல்களில் அவர்களுடைய டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ரொமான்ஸ் காட்சிகள் மூலம் எல்லை மீறி காட்டப்பட்டது. இதனை கண்டிக்கும் விதமாக கமெண்ட்ஸ் மூலம் மக்கள் அவர்களுடைய ஆதங்கத்தை கொட்டி வந்த நிலையில் டிவி சீரியல்களை தணிக்கை செய்து வெளியிட தற்போது வழக்கு கோரியதால் நிச்சயம் இதில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Trending News