Tamil Actor: தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் எடுப்பது இப்பொழுது பேஷனாக மாறிவிட்டது. ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதை ஏதாவது ஒரு ட்ரிக்ஸ் செய்து இரண்டாம் பாகமாக எடுக்க திட்டமிட்டு கல்லாவை நிரப்பி விடுகின்றனர்.
அப்படி இரண்டாம் பாகமாக ஹிட் படங்களை எடுத்தால் பரவாயில்லை. ஆனால் முதல் பாகமே மண்ணை கவ்விய நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் லாஜிக்கே இல்லாமல் சிபிராஜ் தைரியமாக நடித்து வருகிறார். எதற்காக இப்படி ஒரு முடிவெடுத்தார் என பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
Also Read: டாப் 6 ஹீரோக்களின் நூறாவது படம் வெற்றியா தோல்வியா?. ரஜினி, கமலையே தூக்கி சாப்பிட்ட கேப்டன் பிரபாகரன்
வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர்என எண்பதுகளில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவில் ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கும் சத்யராஜ். தன்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அப்படியே மெனக்கிட்டு நடிப்பவர். எவ்வளவு பெரிய நடிகர் சத்யராஜ், அப்படிப்பட்டவரின் வாரிசா இவர் என பெயர் வாங்கும் அளவிற்கு சிபிராஜ் சினிமாவில் ஜெயிக்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம் இவர் தேர்வு செய்யும் கதை தான். ஆரம்பத்தில் இருந்து இவருடைய படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. படத்தின் கதையை சரியாக தேர்வு செய்யத் தெரியாவிட்டால் அப்பாவின் துணையை நாடலாம்.
ஆனால் அதை செய்ய மறுக்கிறார். ஏற்கனவே சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த படம் மொக்கை திரைப்படம் தான் ஜாக்சன் துரை. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
இந்த படம் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கிறது . கட்டப்பா கூட இருந்தும் சிபிராஜ் கரைசேர மாட்டுகிறார். இப்படியே போனால் இன்னும் பல வருடங்களுக்கு சிபிராஜ் வளரும் நடிகராகவே தமிழ் சினிமாவில் இருக்க வேண்டியதுதான்.
Also Read: மனசுல பட்டதை அப்படியே போட்டு உடைக்கும் 5 ஹீரோக்கள்.. எவ்வளவு பெரிய கொம்பனாலும் அசராத கேப்டன்