வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒன்னு இல்ல ரெண்டு வீடா, டபுள் ட்ரீட் கொடுத்த கமல்.. சம்பவத்துக்கு தயாராகும் பிக் பாஸ் 7 ப்ரோமோ

Bigg Boss 7 promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு அதிகம் தான். இந்த சூழலில் பிக் பாஸ் 7 எப்போது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

ஆனால் இப்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவால் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. அதாவது இந்த ப்ரோமோவில் கமல் டபுளாக வந்திருக்கிறார். இதிலேயே சஸ்பென்ஸ் என்னவென்று தெரிந்திருக்கும். அதாவது சும்மாவே பிக் பாஸ் வீட்டில் ரணகளமாகத் தான் இருக்கும்.

Also Read : லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

ஆனால் இப்போது வீடு இரண்டாகப் போகிறதாம். அதாவது எப்போதுமே பிரம்மாண்ட செட் அமைத்து பிக் பாஸ் வீடு அமைந்திருக்கும். இந்த முறை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடு உள்ளது என்பது போல கமல் கூறுகிறார். எனவே ரசிகர்கள் எதிர்பாராத பல சுவாரசியம் இந்த சீசனில் அரங்கேற இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஓட்டுநர் ஷர்மிளா போன்ற பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அடுத்த அடுத்த ப்ரோமோ வெளியாகி இன்னும் சுவாரசியத்தை தூண்டி இருப்பதால் பிக் பாஸ் அல்டிமேட்டாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

Also Read : பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கு தயாரான EVP ஃபிலிம் சிட்டி.. ஆனா இந்த வாட்டி ரெண்டு பிக்பாஸ் வீடு!

இந்த முறையும் கமல் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. மேலும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 7 தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பெயர் ஒன்று ஒன்றாக வெளியாக இருக்கிறது. பிக் பாஸ் ரசிகர்களே இந்த சீசனை பார்க்க தயாராகுங்கள்.

Trending News