வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

துடித்து போன அஜித், வியந்து பார்த்த ஷாலினி.. 23 வருட திருமண வாழ்க்கையின் ரகசியம்

திரையுலகில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய எத்தனையோ தம்பதிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் திருமணமாகி 23 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் அந்த காதல் மாறாமல் ரொமான்ட்டிக்காக வாழ்ந்து வரும் ஒரே ஜோடி என்றால் அது அஜித், ஷாலினி மட்டும் தான்.

உண்மையில் இவர்களின் இத்தனை வருட திருமண வாழ்க்கையின் ரகசியம் எதிரதிர் குணங்கள் தான் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை. எப்படி என்றால் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது தான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

Also read: எதிர்பாராத கூட்டணியில் ஏகே 62.. விக்னேஷ் சிவனை தொடர்ந்து மகிழ்திருமேனிக்கும் போட்ட பட்ட நாமம்

ஆனால் எப்படி காதலிக்க தொடங்கினார்கள் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்த வகையில் இருவர் மனதிலும் காதல் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் படப்பிடிப்பில் அஜித், ஷாலினி கையை வெட்டுவது போல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

அப்போது அட்டை கத்தி இல்லாத காரணத்தால் பேனா கத்தி அஜித்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஷாலினி மீது கத்தி பட்டு விடக்கூடாது என்பதற்காக அஜித் ரொம்பவும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் அவர் அந்த பதட்டத்தில் இருந்ததால் அந்த காட்சியின் போது கத்தி ஷாலினி கையை லேசாக பதம் பார்த்திருக்கிறது.

Also read: விஜய் கேட்டும் விட்டுக் கொடுக்காத அஜித்.. 23 வருடங்களுக்குப் பிறகு உண்மையை உடைத்த இயக்குனர்

சிறு கீறல் என்பதால் ஷாலினி அது குறித்து எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் இருந்திருக்கிறார். ஆனால் அதற்கு நேர்மாறாக அஜித்தோ பதறிப்போய் அக்கம் பக்கத்தில் இருந்த டாக்டர்கள் அனைவரையும் வரவழைத்து ட்ரீட்மென்ட் பார்த்திருக்கிறார். ஒரு சிறு காயத்திற்காக அவர் இந்த அளவுக்கு துடிப்பதை பார்த்த ஷாலினி ரொம்பவும் வியந்து போயிருக்கிறார்.

டாக்டர்கள் கூட அவருக்கு ஒன்றும் இல்லை எதற்காக இவ்வளவு பதட்டம் என்று அஜித்தை கேலி செய்திருக்கிறார்கள். இப்படி எதிர் எதிர் குணங்களுடன் இருந்த அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப்பட்டு காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். அப்போதிலிருந்து இப்போது வரை இவர்களுக்குள் இருந்த அந்த அன்னோன்யம் கொஞ்சம் கூட குறையவில்லை. இதுவே இவர்கள் திருமண வாழ்க்கையின் ரகசியமாகவும் இருக்கிறது.

Also read: காசு பைத்தியம் பிடிச்சு அலையறாங்க.. நயன்தாரா லிஸ்டில் சேர்ந்த ரேசர் அஜித்

Trending News