செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

100 வயதை தாண்டி வாழும் ஜப்பானியர்களின் ரகசியம்.. ஆரோக்கியமா வாழ இந்த இரண்டு வழிகளை ஃபாலோ பண்ணுங்க!

Secret of Japanese people: சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று ஒரு சொலவடை உண்டு. அதாவது நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கும் பணத்துக்கே ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் நம்முடைய குறிக்கோள் எதை நோக்கி பயணிக்கிறது என்றால் பணத்தை சம்பாதித்து மற்றவர்களை விட ஒரு படி முன்னேறி காட்ட வேண்டும் என்று தான்.

அவர்கள் முன்னாடி ஆடம்பரமாக வாழ்ந்து மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு கார் பங்களா போன்ற வசதி வாய்ப்புடன் இருக்க வேண்டும் என்று ஓடா தேய்ந்து கட்டெறும்பாய் மாறுகிறோம். ஆனால் இதையெல்லாம் ஆண்டு அனுபவிப்பதற்கு மிக முக்கியமானது நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தான்.

நம்முடைய முதல் எதிரி எது தெரியுமா?

இந்த ஒரு விஷயம் நம் மூளைக்கும் மனசுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் அதையெல்லாம் மறந்துவிடுகிறோம். பணத்தை சம்பாதிப்பதுடன் சேர்த்து நோய் நொடியையும் நாமலே தேடி வாங்கிக் கொள்கிறோம். காசு பணம் வந்து விட்டால் அதுக்கேற்ற மாதிரி சாப்பாடு உணவு முறைகள் எல்லாம் மாறுகிறது.

இதனால் உடற்பயிற்சியும் இல்லாம ஆரோக்கியமாக வாழவும் முடியாமல் ஒரு குறிப்பிட்ட வயதிலேயே மாத்திரை மருந்து போன்ற விஷயங்களை எடுத்துக்கொண்டு அவஸ்தைப்பட்டு வருகிறோம். ஆனால் இந்த ஒரு விஷயம் ஜப்பான் நாட்டுக்காரர்களிடமிருந்து நம் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் கிட்டத்தட்ட 70 வயசு வரை எந்த ஒரு மருந்து மாத்திரையும் எடுக்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் உட்கொள்ளும் உணவு முறைகள் தான். புளிக்க வைத்த சாப்பாடுகளை விரும்பி சாப்பிடுவது. (உதாரணத்திற்கு பழைய சாதம், கேப்பை கூழ், கம்பங்கூழ்) அத்துடன் வேக வைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிடுவார்கள்(கிழங்கு வகைகள்). பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள் அதற்கு பதிலாக சுட்டு தான் சாப்பிடுவார்கள்.

இது மட்டுமில்லாமல் முக்கால்வாசி அவர்கள் எங்கே போவதாக இருந்தாலும் நடந்து போவார்கள். தூரமாக இருந்தால் சைக்கிளில் போவார்கள். அதைவிட தூரமாக இருந்தால் ட்ரெயின் மற்றும் பஸ் வசதியை யூஸ் பண்ணி விடுவார்கள். காரணம் அதற்கு போவதற்கும் நடந்து போக வாய்ப்பு இருக்கும். ஆனால் நம் நாட்டு மக்கள் பக்கத்து கடையில் ஒரு சின்ன பொருளை வாங்க வேண்டும் என்றாலும் இருசக்கர வாகனத்தை தான் பயன்படுத்தி போவார்கள்.

சொகுசாக வாழ்வதில் இருக்கும் ஆபத்துக்கள்

இதனால் தேவையில்லாமல் ஒரு செலவும் ஆகிறது, உடல் ஆரோக்கியமும் இல்லாமல் சோம்பேறி ஆகி விடுகிறோம். அதனால் தான் 35 வயதிலேயே உடம்பில் ஏகப்பட்ட பிரச்சினையை அனுபவித்து அதற்கான மாத்திரை மருந்துகளை எடுத்து வாழ்நாள் முழுவதும் அவதிப்படுகிறோம். அத்துடன் நம்மளுக்கு ஒரு விடுமுறை என்று உடனே நிம்மதியாகிவிட்டது என்று நல்லா தூங்கி டிவி போன் பார்த்துக் கொண்டே நேரத்தை செலவழித்து விடுவோம்.

ஆனால் ஜப்பான் காரர்கள் ஒரு நாள் லீவு கிடைத்தாலும் அன்று மிச்சமிருக்க வீட்டு வேலைகள் அவர்களுக்குள்ள வேலைகளை பார்த்தாக வேண்டும் என்று அதை முடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கு 60 வயதில் ரிட்டயர்மென்ட் கிடைத்தாலும் அதன் பிறகு வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்களால் முடிந்தவரை சிறு சிறு வேலைகளை பார்த்து சுறுசுறுப்பாகவே இருப்பார்கள்.

அதனால் தான் அவர்கள் கூடுமானவரை 100 வயது வரை எந்தவித நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஒரு விஷயம் எல்லாம் நமக்கும் தெரியும் ஆனாலும் அதை எல்லாம் நாம் செய்ய தயாராக இல்லை. அதற்கு காரணம் நம்முடைய சோம்பேறித்தனம் தான். எதுனாலும் பார்த்துக்கலாம் என்ற ஒரு அசால்ட்.

பணம் சம்பாதிப்பது எப்படி? சந்தோஷமாக இருப்பதற்கு என்னெல்லாம் செய்யணுமோ அதையெல்லாம் செய்கிறோம். ஆனால் ஆரோக்கியம் இருந்தால் மட்டும்தான் எல்லாத்தையும் ஆண்டுஅனுபவிக்க முடியும் என்பதை மறந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கங்கள் மற்றும் நடை பயிற்சி ரொம்பவே அவசியமானது.

Trending News