ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் சமீபத்தில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள ஜோதிகா இப்போது தனது உடம்பை 15 கிலோ குறைத்து இருக்கிறார்.
சினிமாவில் டாப் இடத்திலிருந்து ஜோதிகா தான் கமிட் செய்த படங்களிலிருந்து விலகி சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்து வந்தார்.
45 வயதில் இளமையாக இருக்கும் ஜோதிகா

இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் நடித்து வந்தார். உடல் பருமன் அதிகமாக இருந்த நிலையில் 45 வயதில் உடற்பயிற்சி மூலம் தனது இளமையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்.
அதற்காக அவர் என்னென்ன விஷயங்களை பின்பற்றி இருக்கிறார் என்பதை சமீபத்தில் கூறியிருந்தார். காலை எழுந்த உடன் குறைந்தபட்சமா 30 நிமிடங்கள் வரை ஜோதிகா ரன்னிங் செய்வாராம். அதேபோல் அவர் அருந்தும் பானங்களும் ஜோதிகாவின் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.
ஜோதிகாவின் க்யூட்டான போட்டோ

குறிப்பாக கிரீன் டீ மற்றும் இளநீர் போன்றவற்றை தான் அருந்துவாராம். மேலும் உடற்பயிற்சி வாயிலாகவும் தனது உடல் எடையை குறைத்துள்ளதாக கூறியிருக்கிறார். அன்றாட வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை மாற்றினாலே உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சியை காட்டிலும் உணவு முறை உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு இருக்கிறது. மேலும் ஜோதிகாவின் இப்போது உள்ள க்யூட்டான புகைப்படங்கள் இணையதில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஜோதிகாவா இது என ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.