திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

73 வயது ரஜினிக்கு 45 வயது நடிகை மனைவியா.. Ex மருமகன் ஜோடியை ஹீரோயினாக்கிய ரஜினி

Rajini: ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் வந்த சுவடு தெரியாமல் போனது.

அதை அடுத்து லைக்கா தயாரிப்பில் ரஜினி, அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படத்தை ஜெய் பீம் ஞானவேல் இயக்கியுள்ளார். ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்திருப்பதாலேயே மீடியாக்கள் இதை உற்று கவனித்து வருகின்றன.

அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் கம்பெனியின் முக்கிய ரகசியத்தை மலையாள சேச்சி மஞ்சு வாரியர் கசிய விட்டுள்ளார்.

இப்படத்தில் இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அது என்ன என்பது மட்டும் சஸ்பென்சாக இருந்தது. அதை தற்போது உடைத்துள்ள மஞ்சு தான் ரஜினிக்கு ஜோடியாக அதாவது அவரின் மனைவியாக நடிக்கிறேன் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு மனைவியாக நடிக்கும் மஞ்சு வாரியர்

இதுதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 73 வயதான ரஜினிக்கு 45 வயதான இவர் ஜோடியாக நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இவரை விட வயது குறைவான இளம் நடிகைகளையே தனக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது மஞ்சு வாரியர் ரஜினியின் முன்னாள் மருமகன் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது மாமனாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்த லிஸ்டில் நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோர் இருந்த நிலையில் மஞ்சுவும் அதில் இணைந்துள்ளார். இப்படியாக முக்கிய விஷயத்தை ஓப்பன் செய்துள்ள மஞ்சு வாரியர் வேட்டையன் ஜெய் பீம் படத்தை விட பல மடங்கு ஃபயராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பகத் பாஸில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பல நட்சத்திரங்கள் இருக்கின்றனர். ஆனாலும் இது ரஜினி படத்திற்குரிய அம்சமாகத்தான் இருக்கும் என்ற சீக்ரெட்டையும் வெளியிட்டுள்ளார்.

வேட்டையன் சீக்ரெட்டை ஓப்பன் செய்த சேச்சி

Trending News