திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அந்த விஷயத்தில் திருப்தி அடையாத சீனியர் நடிகை.. மாஸ்டர் பிளான் போட்டு காரியத்தை சாதித்த சம்பவம்

சிறுவயதிலிருந்தே நடித்து வரும் நடிகை ஒருவர் தற்போது செய்திருக்கும் விஷயம் தான் சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த நடிகை 40 வயதை கடந்த நிலையிலும் இன்னும் பரபரப்பாக நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வரும் இந்த நடிகை தற்போது நடித்து வரும் ஒரு சீரியல் டிஆர்பி-யில் முதலிடத்தில் இருந்து வருகிறது. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியலில் சீனியர் நடிகையான இவருக்கு அதே சம்பளம் தான் இன்னமும் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

Also read: 2 நாள் பெரிய புள்ளியை திருப்திப்படுத்திய நடிகை.. பண்ணை வீடு, நாலு ஏக்கர் நிலமும் கொடுத்து கைமாறு

இதனால் அதிருப்தி அடைந்த நடிகை மெல்ல விஷயத்தை ஓப்பன் செய்திருக்கிறார். ஆனால் தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டு காரியத்தை சாதித்திருக்கிறார் இந்த நடிகை. அதாவது நடிகை சீரியலை விட்டு விலகப் போகிறார் என்ற ஒரு செய்தி தீயாக பரவியது.

அதை பற்ற வைத்த நடிகை இதன் மூலம் சீரியல் டீமுக்கும் செக் வைத்திருக்கிறார். ஏற்கனவே அந்த சீரியலில் ஒவ்வொருவராக மாற்றப்பட்டு கதையின் போக்கே குழப்பமாக இருந்து வருகிறது. இதில் இந்த நடிகையும் மாறிவிட்டால் மொத்த டிஆர்பியும் படுத்து விடும்.

Also read: வயசான கட்டையுடன் வாழ துடிக்கும் ஹான்சம் நடிகர்.. 20 வயது மகன் இருக்கும் போது, இந்த அட்டூழியமா!

அந்த ஒரு காரணத்தினாலேயே நிர்வாகம் நடிகைக்கு திருப்தி அளிக்கும் வகையிலான சம்பளத்தை கொடுத்து சமாதானப்படுத்தி இருக்கிறது. இப்படி போட்ட ப்ளான் ஒர்க் அவுட் ஆன சந்தோஷத்தில் இருக்கிறாராம் அந்த சீனியர் நடிகை. இதை கேள்விப்பட்ட இளம் நடிகைகள் நமக்கெல்லாம் இந்த சாமர்த்தியம் பத்தாதுப்பா என்று சலசலத்து வருகின்றனர்.

Trending News