செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

சிங்க பெண்ணே கதை போலவே புதுசாக வரப்போகும் சீரியல்.. அன்பு மகேஷ் கேரக்டருக்கு சிங்கிளாக வரும் ஹீரோ

Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்க பெண்ணே சீரியலில், ஆனந்தி ஏழை வீட்டு பெண்ணாக இருந்தாலும் கிராமத்தில் துள்ளி திரிந்த அழகு தேவதையாக இருந்தார். அந்த சமயத்தில் கிராமத்திற்கு போன மகேஷ், ஆனந்தி பற்றி எதுவும் தெரியாமல் ஆனந்தியை பார்த்ததும் காதலிக்க ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக ஆனந்தி குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை தேடி சென்னைக்கு கிளம்பினார்.

அப்படி கிளம்பிய பொழுது மகேஷ் கார்மெண்ட்ஸ் இல் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஆனந்தியை மகேஷ் விடாமல் காதலிக்க ஆரம்பித்து விட்டார். இதற்கிடையில் அன்பு, ஆனந்தி சென்னைக்கு வந்த பொழுது ஆனந்தியை பார்த்த அந்த தருணத்திலேயே காதலிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இது ஒரு முக்கோண காதலாக மாறிவிட்டது.

தற்போது ஆனந்தி அன்பு காதல் உறுதியாகி விட்ட நிலையில் மகேஷ் காதல் கேள்விக்குறியாகிவிட்டது. இப்படி இந்த ஒரு கதையை வைத்து சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது சிங்க பெண்ணே சீரியல். தற்போது இதே மாதிரி கதையை ஜீ தமிழ் காப்பியடித்து புதுசாக ஒரு நாடகத்தை கொண்டு வருகிறார்கள்.

அதாவது தமிழ் என்ற நாடகம் ஜீ தமிழில் புத்தம் புதுசாக வரப்போகிறது. கார்மெண்ட்ஸ்ல் வேலை பார்க்கும் தமிழ் என்கிற பொண்ணு தொடர்ந்து பல வருடங்களாக பெஸ்ட் ஊழியர் என்ற விருதை பெற்று வருகிறார். அதே மாதிரி கஷ்டத்தில் இருப்பவர்களையும் அரவணைத்து பேசி அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் கேரக்டர் அமைந்து வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தி கேரக்டர் எப்படியோ அதே மாதிரி தமிழ் கேரக்டர் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மேலும் மகேஷ் மற்றும் அன்பு இருவருடைய கேரக்டருக்கு பதிலாக சிங்கிள் ஹீரோவாக ஒருவர் என்டரி கொடுக்கிறார். அதாவது தமிழ் வேலை பார்க்கும் கார்மெண்ட்ஸில் ஒரு சாதாரண ஊழியராக கவின் வேலை பார்க்கிறார். பிறகு இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்த பொழுது அந்த கார்மெண்ட்ஸின் ஓனர் ஆபீஸ்க்கு வருகிறார்.

அப்படி வருபவர் தான் தமிழ் கூடவே இருந்து காதலித்த கவின். அந்த வகையில் இவர்களுடைய காதல் எப்படி கை கூடுது, பொய் சொல்லி நம்ப வைத்த கவினை தமிழ் ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்விக்குறியுடன் இந்த நாடகம் புத்தம் புதுசாக ஜீ தமிழ் சேனலில் வரப்போகிறது.

Trending News