Sivakumar: அந்த காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சிவகுமாரின் படங்களும் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வந்தது. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் சிவகுமார் அதிகம் கடவுள் படங்களில் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருந்த சிவகுமார் மார்க்கெட் இறங்கிய பிறகு தன்னுடன் வயது மூத்த நடிகர்களுக்கு கூட அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து வெள்ளிதிரையிலிருந்து சின்னத்திரையில் களம் இறங்கினார்.
ராதிகாவின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன சித்தி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் சினிமாவை காட்டிலும் சீரியலில் நடிக்கும் போது தனக்கு நல்ல வருமானம் கிடைத்து வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் இருந்ததாக சிவகுமார் கூறியிருந்தார்.
சிவக்குமார் நடிப்பை நிறுத்த காரணமாக இருந்த சீரியல்
ஆனால் நடிப்பே வேண்டாம் என்று முழுக்கு போடவும் சித்தி சீரியல் தான் காரணமாக இருந்ததாம். அதாவது அந்த சீரியலில் பாசமலர் படத்தில் இடம் பெற்றது போல ஒரு காட்சி வந்ததாம். சிவாஜி எப்படி பாசமலர் படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சியில் மிகவும் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக தூங்காமல் சாப்பிடாமல் இருந்து நடித்தாராம்.
அதேபோல் இந்த காட்சியும் தொடரில் வரவேண்டும் என்பதற்காக சிவகுமார் மெனக்கெட்டு சாப்பிடாமல் தூங்காமல் இருந்து அந்த காட்சியை நடித்தாராம். ஆனால் அவர் நடிக்கும் போது அருகில் இருந்த பெண் தனது பாய் பிரண்டுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தாராம்.
இதனால் கடுப்பான சிவகுமார் ஏன் இப்படி சிரிக்கிறேனு கோபம் வந்து கேட்டிருக்கிறார். அதற்கு ஏன் சார் கத்துறீங்க, இதெல்லாம் டப்பிங்ல தான திரும்ப பேச போறீங்க என்று நக்கலாக கூறி இருக்கிறார். இவ்வளவு மெனக்கெட்டு நடித்தும் அங்கு சிவகுமாருக்கு எந்த மரியாதையும் கிடைக்கவில்லையாம்.
சிவாஜி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தும் வீணா போச்சே என அன்று தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டு இனி மேக்கப் போடக்கூடாது என்று முடிவெடுத்தாராம். அன்றிலிருந்து தற்போது வரை தான் நடிக்கவில்லை என்று சிவக்குமார் சமீபத்தில் கூறியிருந்தார்.
நடிப்பை நிறுத்திய சிவகுமார்
- சிவகுமார் மார்க்கெட்டையே கேள்விக்குறியாக்கிய ரஜினி
- தேரை இழுத்து தெருவில் விட்ட சிவகுமாரின் மருமகள்
- மணிரத்தினத்துக்கே நோ சொன்ன சிவகுமார்!