செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்த ரெண்டு கேரக்டர் மறைந்து போனதால் தலைகீழாக மாறிய சீரியல்.. டிஆர்பி இல்லாமல் தடுமாறும் சன் டிவி, விஜய் டிவி

Sun tv And Vijay Tv Serial: சின்னத்திரை தொலைக்காட்சியை பொறுத்தவரை மக்கள் அனைவரும் பார்த்து ரசித்து வருவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை தான். ஏனென்றால் இந்த சேனலில் முக்கால்வாசி நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கிட்டத்தட்ட 18 சீரியல்கள் வருகிறது. இதற்கு அடுத்ததாக விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் நாடகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து சில சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி போட்டி போட்டு இந்த இரண்டு சேனல்களும் இருக்கிறது.

அதில் கடந்து இரண்டு வருஷமாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது சன் டிவி தான். அதற்கு காரணம் இதில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல். இந்த நாடகம் ஆரம்பத்தில் இருந்து முதல் இடத்தை பிடித்து மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றது. அதற்கு காரணம் எதார்த்தமான நடிப்பை கொடுத்து நக்கல் நையாண்டி பேச்சுக்களை வெளிப்படையாக காட்டி அனைவரது வீட்டிலும் ஒருவராக தினமும் குடி புகுந்தவர்தான் குணசேகரன் என்கிற மாரிமுத்து ஆக்டர்.

இதில் இவருடைய கேரக்டர் நெகட்டிவ் ஆக இருந்தாலும் அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு நடிப்பால் அதிகமாக கவர்ந்தார். அதனாலேயே இவருக்காக மட்டுமே நாங்கள் சீரியல் பார்க்கிறோம் இன்று பலரும் அவர்களுடைய சந்தோசத்தை பகிர்ந்து வந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் குணசேகரனின் இறப்பு மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

ஆனால் இது அதோடு முடிவதோடு இல்லாமல் ஒவ்வொரு நாளும் நாடகத்தை பார்ப்பவர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. அதாவது அவர் இல்லாததால் இந்த நாடகமே பார்க்க பிடிக்கவில்லை. கதையும் நன்றாக இல்லை, அவருக்கு பதிலாக புது குணசேகரன் வந்தாலும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆக மொத்தத்தில் இப்பொழுது எங்களுக்கு பிடித்த மாதிரி இல்லை என்று எதிர்நீச்சல் சீரியலை வெறுத்துப் போய் வருகிறார்கள்.

இதனாலையே தற்போது எதிர்நீச்சல் சீரியல் ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டது. அதே மாதிரி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கேரக்டரில் நடித்த சித்ரா நடிப்பும் அந்த நாடகத்திற்கு தூக்கலாக அமைந்தது. அத்துடன் மக்கள் மனதிலும் இந்த நாடகம் மிக உயரத்தில் இருந்தது. அதற்கு காரணம் அனைவருடைய ஃபேவரிட் நடிகையாக சித்ராவின் நடிப்பு இருந்தது. ஆனால் அது நீடிக்காமல் அவருடைய இறப்பு அதிக துக்கத்தை கொடுத்தது.

அதன் பிறகு இந்த நாடகம் தட்டு தடுமாறி தலைகீழாக மாறிவிட்டது. இவருக்கு பதிலாக இரண்டு பேர் முல்லை கேரக்டருக்கு வந்தாலும் சித்ராவின் தாக்கம் தான் அதிகமாக இருந்தது. அந்த அளவிற்கு சித்ரா உடைய நடிப்பும் குணசேகரனின் பேச்சும் மக்களை கவர்ந்தது. இதனாலேயே சன் டிவி மற்றும் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங் தடுமாறிக் கொண்டு வருகிறது.

Trending News