புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீண்டும் இணையும் ரியல் ஜோடி.. டிஆர்பிகாக விஜய் டிவி எடுத்த அஸ்திரம்

Vijay Tv : ஒரு காலத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் தான் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக முதல் ஐந்து இடங்களை கூட பிடிக்க முடியாமல் விஜய் டிவி திணறி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் சன் டிவி சீரியல்கள் தான்.

கயல், சுந்தரி, சிங்க பெண்ணே என நிறைய தொடர்கள் சன் டிவியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. இப்படியே போனால் தலை தப்பாது என்று விஜய் டிவி இப்போது ரியல் ஜோடிகளை மீண்டும் இணைத்து ஒரு சீரியலை விரைவில் ஆரம்பிக்கப் போகிறது. இதனால் விஜய் டிவியின் டிஆர்பி எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சில வருடங்களுக்கு முன்பு சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஆகியோர் இணைந்து நடித்த தொடர் தான் ராஜா ராணி. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இதில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ரியல் ஜோடியை வைத்த விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் தொடர்

இவர்களுக்கு இப்போது இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதன் பிறகு ஆலியா மானசாவை வைத்து ராஜா ராணி 2 தொடரை எடுத்திருந்தனர். ஆனால் இதில் சஞ்சீவிக்கு பதிலாக சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடித்திருந்தார். இந்த தொடரில் நடித்த போது ஆலியா கருவுற்று இருந்ததால் பாதியில் இருந்து விலகி விட்டார்.

இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் சன் டிவியில் வெவ்வேறு தொடர்களில் நடித்து வருகிறார்கள். இப்போது மீண்டும் இவர்களை ஒன்று சேர்த்து பிரவீன் ராஜா ராணி 3 தொடரை இயக்கப் போகிறார். மூவரும் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கின்றனர்.

மீண்டும் இந்த ரியல் ஜோடி இணைவது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் அவர்கள் பிரம்மாண்ட வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினார்கள்.

Trending News