வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாண்டியன் தங்கமயிலுக்கு கொடுத்த சாக் ட்ரீட்மென்ட்.. ராஜியை புகழ்ந்து தள்ளும் கதிர், அவஸ்தைப்படும் சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் வேலைக்கு போகும்பொழுது தங்கமயில் இடம் எனக்கு மதியம் நீ சாப்பாடு எடுத்துட்டு வர வேண்டும் என்று சொல்லி வேலைக்கு போய்விட்டார். இதனால் தங்கமயில், வேண்டாம் வெறுப்பாக சரவணன் சொல்லிவிட்டதாக சாப்பாட்டை டிபன் கேரியரில் கட்டிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்ததும் கோமதி, நீ திருந்தவே மாட்டியா என்று திட்டுகிறார். உடனே தங்கமயில் நானா போக வேண்டும் என்று ஆசைப்படவில்லை. உங்க பையன் தான் இன்னைக்கு சாப்பாடு எடுத்துட்டு வா என்று சொல்லிட்டுப் போனார் என சொல்கிறார். அதற்கு கோமதி, நீ இந்த நிலைமையில் இருக்கும் பொழுது போனா பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாரும் சரவணன் தான் தப்பா நினைப்பாங்க. அதனால் நீ போக வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் பழனிச்சாமி வீட்டிற்கு வருகிறார். கோமதி, பழனிசாமிடம் உங்க மாமா ராஜி பேசினதை நினைத்து கோவமாக இருக்கிறாரா என்று கேட்கிறார். அதற்கு பழனிசாமி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை ராஜி மனசுல பட்டதை தைரியமாக சொன்னதை நினைத்து சந்தோஷமாக பெருமைப்படுத்தி பேசுகிறார் என்று சொல்கிறார். உடனே அப்படி என்றால் டியூஷன் எடுப்பதற்கு அவருக்கு சம்மதமா என்று கோமதி கேட்கிறார்.

அதற்கு பதில் தெரியவில்லை என்று பழனிச்சாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது தங்கமயில், நீங்க கடைக்கு போகும் பொழுது சரவணன் மாமாவிடம் இந்த சாப்பாடு கேரியரை கொடுத்துட்டு போங்க என்று சொல்கிறார். இன்னும் தங்கமயில் வரவில்லை என்று சரவணன் ஆசையுடன் காத்து கொண்டிருக்கிறார். ஆனால் பழனிச்சாமி சாப்பாடு எடுத்துட்டு வந்ததை நினைத்து ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார்.

உடனே தங்கமயிலுக்கு போன் பண்ணி நீ ஏன் வரவில்லை என்று சரவணன் கேட்கிறார். அதற்கு சமாளித்துக் கொண்டு பேசும் பொழுது சரவணன் போன்லயே ரொமான்ஸ் பண்ணி முத்தத்தை கொடுத்து விட்டார். ஆனாலும் தங்கமயிலிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ரியாக்ஷன் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் தங்கமயில், சரவணன் பின்னாடி அலைந்தது போக தற்போது சரவணன், தங்கமயில் பின்னாடி அலையும் நிலைமைக்கு வந்துவிட்டார்.

அடுத்ததாக வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜியிடம் டியூஷன் எடுப்பதற்கு சம்மதத்தை தெரிவித்து பெருமையாக புகழ்ந்து பேசி விட்டார். உடனே ராஜி ரூமுக்கு போய் ரொம்பவே கெத்தாக இருக்கிறார். அத்துடன் இனி இந்த ரூம் மேட்டில் தேவையான செலவையும் நானும் பார்த்துக்கொள்கிறேன் என்று கதிரிடம் சொல்கிறார். உடனே கதிர், நீ பண்ற விஷயம் நல்லது என்று உனக்கு தெரிந்ததால் அதில் பிடிவாதமாக இருந்து நினைத்ததை சாதித்து விட்டாய்.

இதே மாதிரி இனி எல்லா விஷயத்துக்கும் உனக்கு சரி என்று தோன்ற விஷயத்துக்கு உறுதியாக நில்லு என்று ராஜியை பெருமைப்படுத்தி பேசி விட்டார். இதற்கிடையில் பாண்டியன், ராஜிக்கு சம்மதம் கொடுத்த நிலையில் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தங்கமயில் பார்த்து நீ என்ன படித்திருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு தங்கமயில் எம்ஏ இங்கிலீஷ் படித்து இருக்கிறேன் என்று சொல்கிறார்.

உடனே பாண்டியன் அப்படி என்றால் நீயும் வேலைக்குப் போக முயற்சி எடு. உன் படித்த படிப்பை நீ ஏன் வீணாக்குகிறாய். அதனால் நீயும் வேலைக்குப் போ என்று பாண்டியன், தங்கமயில் இடம் சொல்லி சாக் ட்ரீட்மென்ட் கொடுத்து விட்டார். இந்த ஒரு விஷயத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் மறுபடியும் தங்கமயில் எதாவது பொய் சொல்லி குளறுபடி பண்ண வாய்ப்பு இருக்கிறது.

Trending News